செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

பாதுகாப்பாக உணரும் மக்கள்: பாஜ
சனி 04 மே 2019 15:46:52

img

புதுடில்லி

ராகுலால் மோடியின் செல்வாக்கை ஒன்றும் செய்ய முடியாது என அமேதி மக்கள் காட்டுவார்கள் எனவும், தங்களின் சமீபத்திய கருத்து கணிப்பின் படி மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாகவும் பா.ஜ., தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், மோடி போன்ற பலமான பிரதமரின் செல்வாக்கை சிதைக்க ராகுலால் எவ்வாறு முடியும்? மோடியை 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இதில் 20 சதவீதத்தை எட்டுவதே ராகுலுக்கு சிரமமாக உள்ளது. மக்களின் கருத்திற்கு நேர்மாறான கருத்துக்களையும், பொய்களையும் ராகுல் கூறி வருகிறார். பிரதமர் மோடிக்கு எதிரான அவரது பழிவாங்கும் எண்ணம் நிறை வேறாது என்றார்.

2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரை பா.ஜ., எடுத்த தேர்தல் சர்வேயின்படி, இந்தியாவில் 10 ல் 7 பேர் இரவில் தனியாக நடந்து செல்லும் போது பாது காப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். 2014 ல் மோடி ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில் இருந்ததை விட இந்த பாதுகாப்பு உணர்வு தற்போது 17 சத வீதம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமேதிக்கு சுற்றுலா பயணியை போல் ராகுல் சென்று வருகிறார். ஏழ்மை மற்றும் வளர்ச்சியின்மை போன்றவற்றால் காங்., அந்த தொகுதி மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றார்.

 

 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img