வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பட்ஜெட் 2017: மக்களுக்கு விளக்கமளிக்க சிறப்புக் குழு
திங்கள் 24 அக்டோபர் 2016 13:12:41

img

2017-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமுதாயம் நன்மை அடையக்கூடிய வகையிலேயே பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பல சிறப்பு அறிவிப்புகளை செய்துள்ளார். இவற்றில் குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 5 கோடி வெள்ளியும், இந்திய சமுதாயத்தின ரிடையே வருமானத்தை அதிகரிப்பதற் காகவும் திறமை ஆற்றலை உயர்த்து வதற்காகவும் 5 கோடி வெள்ளியும், சிறு தொழில் முனைவர்களை உருவாக்கு வதில் தெக்குன், அமானா இக்தியார் மூலமாக 15 கோடி வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்ப்பள்ளி களில் அதிகமான பாலர் வகுப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எங்களது முறையீட்டை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் உருவாக்குவதற்காக 1 கோடி வெள்ளி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறினார். இதன் மூலமாக இன்னும் 50 தமிழ்ப்பள்ளிகளில் பாலர் கல்விக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் வழி அங்கு பயிலக்கூடிய மாணவர்கள் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைத் தொடர்வதர்கான வாய்ப்பினை ஏற்பாடு செய்ய முடியும். சமுதாயத்திற்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்திய சமுதாயத்திற்காக சிறப்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள எல்லா வாய்ப்புகளையும் பெறுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு ஏதுவாக, அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் எவ்வகையில் இந்திய சமுதாயத்திற்குப் போய் சேர முடியும் என்பதை ஆராய்ந்து, அவை சரியாக அவர்களுக்குப் போய் சேர்வதற்கான வேலைகளையும் ம.இ.காவின் வழி விரைவிலே திட்டமாக வரையறுக்கப்பட்டு சிறப்புக் குழு ஒன்றும் உருவாக்கப்படும் என அவர் சொன்னார். வரையறுக்கப்பட்ட திட்டங்கள் கீழ்மட்டத் தலைவர்களின் வழி மக்களுக்கு கொண்டு போய் சேர்வதும் உறுதி செய்யப்படும்.குறிப்பாக, பி40 நிலையில் உள்ள மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுடைமைத் திட்டங்கள், பொருளாதாரச் சூழலை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.இ. திட்டங்கள் போன்ற ஒட்டுமொத் தமாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் இந்தியர்களும் பயன்பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதன் அடிப்படையில், ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பயன்களை நாம் அடைய முடியும் என்றார் அவர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img