img
img

சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா
சனி 20 ஏப்ரல் 2019 14:46:11

img

சியோல்,

சக்திவாய்ந்த போர் தளவாடம் அடங்கிய புதிய ஆயுதத்தை வடகொரியா சோதித்து பார்த்தது. சக்தி வாய்ந்த போர் தளவாடங்கள் அடங்கிய புதிய வகையான ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் நேரில் கண் காணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை ஆகும். 

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில் சில பணிகள் நடப்பதாக செயற்கைகோள் படங்களில் தெரிய வந்ததாக தகவல் வெளியான நிலையில், புதிய சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.  ஆனால், தென்கொரியா இந்த சோதனை தொடர்பாக எந்த ரேடார் தகவல்களையும் பெறவில்லை. எனவே, ஏவுகணை சோதனையாக இந்த சோதனை இருக்காது என்று நம்பப்படுகிறது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
img
ஆஸ்திரேலிய தேர்தல்: கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img