img
img

பெருநாட்டின் முன்னாள் அதிபர்  தற்கொலை 
சனி 20 ஏப்ரல் 2019 14:41:26

img

லிமா, -

பெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா (69). பதவியில் இருந்த போது ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. 

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் லிமாவில் உள்ள ஆலன் கார்சியா வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் சென்றனர். 

அதை அறிந்த அவர் வீட்டில் இருந்த தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். இந்த தகவலை அவரது கட்சி   உறுதி செய்துள்ளது. ஆலன் கார்சியா ஏற்கெனவே 3 தடவை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அவருக்கு இருதய ஆபரேஷன் நடந்துள்ளது.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
img
ஆஸ்திரேலிய தேர்தல்: கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img