சனி 16, பிப்ரவரி 2019  
img
img

தீபாவளி அலங்காரம் புறக்கணிப்பா?
திங்கள் 24 அக்டோபர் 2016 13:03:43

img

ஜாலான் தெங்கு கிளானாவிலுள்ள லிட்டில் இந்தியா, தீபாவளிக்கான அலங்காரம் இன்றி பொலிவிழந்து காணப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் மனவருத்தம் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே போக்குவரத்து நெரிசலாகவும் பரபரப்பாகவும் காட்சியளிக்கும் கிள்ளான், தெங்கு கிளானா சாலை இன்னமும் விழாக்கோலம் பூண்டிருக்கவில்லை. ஆண்டுதோறும் அச்சாலையின் இரு புறங்களில் தீபாவளிக்கென மிக கோலாகலமாக அலங்காரங்கள் செய்யப்படும் நிலையில், பண்டிக்கைக்கு இன்னமும் சில தினங்களே எஞ்சியுள்ள போதிலும் ஆரவாரமின்றி ஜாலான் தெங்கு கிளானா லிட்டில் இந்தியா களை கட்டவில்லை என அங்குள்ள வணிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். அலங்காரம் இல்லை, பரபரப்பு இல்லை. சாலை வெறிச்சோடிக்கிடக்கிறது. இது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக கிள்ளான் லிட்டில் இந்தியா தொழில் முனைவர் சங்கத் தலைவர் என்.பி. ராமன் தெரிவித்தார். அலங்காரம் ஏதுமின்றி சாதாரண நாட்களைப் போல் அச்சாலை இருப்பதாக அவர் சொன்னார். அப்பகுதியை எழில் ஊட்டும் முயற்சிகளில் மாநில அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கொண்டிருப்பதாக ராமன் வருத்தம் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டில் சிலாங்கூர் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது முதல் இதுவரையில் அப்பகுதியை எழில் ஊட்டும் நடவடிக்கைகளுக்கு பெரிதாக அக்கறை காட்டப்பட்டதில்லை. அலங்காரம் மட்டுமின்றி அப்பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்த பெரும் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதில்லை என ராமன் கூறினார். கிள்ளான் மாவட்ட மன்றத்தின் வாயிலாக மாநில அரசாங்கம், ஜாலான் தெங்கு கிளானாவிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியை அலங்கரிக்கத் தவறினால், அப்பணிகளை கிள்ளான் லிட்டில் இந்தியா தொழில் முனைவர் சங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் அறிவித்தார். தீபாவளி வாழ்த்துப் பதாகைகள் உட்பட கண்கவர் அலங்காரங்களைப் பொருத்த நாங்கள் தயார். இந்த லிட்டில் இந்தியா பகுதி முழுவதும் அழகிய கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டார். கிள்ளான் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும், தீபாவளியை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளே இல்லை எனலாம். நாட்டின் முக்கியப் பேரங்காடிகளில் ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக விழாக்கால பண்டிகைக்கான அலங்காரங்களும் அதிரடி விற்பனைகளுமாக இருக்க வேண்டிய தருணத்தில், இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையிலும் தீபாவளி கொண்டாட்ட அலங்கார விவகாரத்தில் இத்தனை அலட்சியம் ஏன்? ஏன் புறக்கணிப்பு?

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
செமினி தமிழ்ப்பள்ளி நில விவகாரம். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்வு பிறக்குமா?

தயாராவதால் இந்திய வாக்காளர்களின் முழுமையான ஆதரவு

மேலும்
img
அபுதாபி பனிச்சறுக்குப் போட்டியில் ஸ்ரீ அபிராமிக்கு முதல் தங்கம்.

உலகின் முன்னணி விளையாட்டாளர்கள்

மேலும்
img
இந்தியர்களுக்கான பெம்பான் நிலத்திட்ட விவரங்கள் எனக்குத் தெரியாது. பேரா மந்திரி புசார் கைவிரிப்பு.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால்

மேலும்
img
எம்.எச்.370: கைப்பேசியில் அழைத்த அந்த மர்ம நபர்.

என்ற சந்தேகத்தையும் இது அப்போது எழுப்பியது.

மேலும்
img
பாம்புகளுடன் குடித்தனம். பூச்சோங் வவாசான் அடுக்குமாடியில் 500 குடும்பங்கள் அவதி.

இவர்கள் தங்கள் குடியிருப்புகளைப் பராமரிப்பதற்காக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img