img
img

இலங்கை கடற்படையைப் பலப்படுத்த புதிய போர்க்கப்பல்கள் 
சனி 06 ஏப்ரல் 2019 14:50:38

img

கொழும்பு, 

இலங்கை கடற்படையைப் பலப்படுத்துவதற்காக, புதிதாக போர்க்கப்பல்கள், படகுகள் கொள்முதல் செய்யப்படும் என்று  பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார். 

இலங்கை கடற்படைக்கு இந்தியாவிடம் இருந்து இரண்டு கப்பல்கள் கிடைத்தன. அமெரிக்காவும் ஒரு போர்க்கப்பலை வழங்க முன்வந்துள்ளது. அந்தக் கப்பல் அடுத்த சில மாதங்களுக்குள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படைக்கு சீனாவும் ஒரு போர்க்கப்பலை வழங்கவுள்ளது.கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துவதற்கு ஜப்பான் இரண்டு படகுகளை வழங்கவுள்ளது. 

கடற்படையும் கடலோரக்காவல்படையும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேலும் பல ரோந்துப் படகுகளைப் பயன்படுத்தும். எதிர்காலத்தில் எந்த வொரு போரையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் இலங்கை படையை பலப்படுத்த இது ஆக்கப்பூர்வமான திட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை

விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி

மேலும்
img
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு நீக்கம்: மேலும் 60 பேர் கைது 

இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை

மேலும்
img
தென்னிலங்கையில் மீண்டும் கலவரம் -வீடுகள்-கடைகள் தீக்கிரை 

மனித வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர்

மேலும்
img
இலங்கையில் பதற்றத்தை தணிக்க 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம் 

பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து

மேலும்
img
இலங்கையில் மீண்டும் வன்முறை சிலாபம் நகரில் ஊரடங்கு உத்தரவு 

சமூக வலைதளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img