செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

பச்சோந்தியே வெக்கப்படும் ராமதாஸ் கூட்டணியை பார்த்தால்
வெள்ளி 05 ஏப்ரல் 2019 17:32:31

img

அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் ராமமூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து வன்னியர் சங்க அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு புகார்களை முன்வைத்தார். அவர் பேசுகையில்,

பச்சோந்தி வெட்கப்படும் அளவிற்கு ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைப்பார். பணம் சம்பாதிப்பார்.  அவர் வன்னிய சமுதாய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.   

ஒரு சொட்டு ரத்தம் கீழே விழுந்தாலும் அவதாரம் எடுத்து வன்னிய சமூகத்தை காப்பாற்றுவேன் என்கிறார் ராமதாஸ். அவர் சமூகத்திற்காக அவதாரம் எடுக்கமாட்டார். அன்புமணிக்கு ஏதும் நடந்தால் அவதாரம் எடுப்பார். ராமதாஸ் தினம் தினம் வெறும் அறிக்கைவிடுகிறார். காகிதப்புலியாக இருக்கிறார் ஆனால் ஒருநாள் கூட இந்த சமுதாயத்தை சேர்ந்த 25 பேர் இறந்தார்களே அவர்களுக்கு இதுவரை  எதாவது உதவி செய்திருக்கிறாரா.  

25 பேர் இறந்து போனதற்கு வெள்ளை அறிக்கை கொடுங்க என்று கேட்கிறோம். இதுவரை அதற்கு பதிலில்லை. நான் மாணவப்பருவதில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்திலேயே  அப்போது நான்தான் வழக்காடி வெளியே வந்தேன். நான் முடிந்தவரை இந்த சமூக மக்களுக்கு போராடி வருகிறேன். ஆனால ராமதாசும் அவரது மகனும் இந்த சமூகத்திற்கு பச்சை துரோகம் செய்துவருகின்றனர். இவர்கள் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள்? 

இந்திய பொருளாதாரத்தை மட்டுமல்ல தமிழக பொருளாதாரத்தையே முடக்கும் திட்டங்களை போட்டவர்கள் இவர்கள். விமானநிலைய விரிவாக்கம், துணைநகரம் வரக்கூடாது, அனல்மின் நிலையம் 40 ஆயிரம் கோடியில் 11 ஐந்தாண்டு திட்டத்தில் கலைஞர் இங்கே கொண்டுவந்தார் ஆனால் என் பிணத்தின் மீதுதான் கொண்டுவர முடியும் என சொன்னார், க்ரீன் ஏர்போர்ட் என பொருளாதார திட்டங்களையும் வேண்டாம் என்று சொன்னார். அவ்வளவு ஆர்ப்பாட்டம் அழிச்சாட்டியம் செய்தார் ராமதாஸ் செய்தார் எனக்கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img