img
img

வாக்கு கேட்டுவந்த பிரேமலதா;அடித்துக்கொண்ட தேமுதிக நிர்வாகிகள்
வியாழன் 04 ஏப்ரல் 2019 13:39:42

img

அதிமுகவில் இருக்கும் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி,  அடாவடி கூட்டணி என்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் பேசப்பட்டுவரும் நிலையில், பிரச்சாரத்திற்கு முன்பே தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் அவர்களுக்குள் அடித்து கொண்டதும் கார் கண்ணாடிகளை உடைத்து கொண்டதும் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவந்தார். அதற்கான ஆலோசனை கூட்டத்தை தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகட்சியினர் நாகை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் விடுதியில் நடத்தினர்.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீர்காழி தேமுதிக நகர செயலாளர் செந்தில் என்பவரிடம், கேப்டன் மன்ற மாவட்ட செயலாளரான சேகர் என்பவர் "எதுக்கெடுத்தாலும் நீயே தண்ணிச்சையாக முடிவெடுக்கிற, என்னிடம் எந்த தகவலும் சொல்றதில்ல, பிரச்சாரத்துக்கு போறவங்களுக்கு எந்த வசதியும் நீ வாங்கி கொடுப்பதில்ல, என்ன நினைச்சிக்கிட்டு இருக்க தொலைச்சிப்பிடுவேன் " என்று வடிவேல் பானியில் ஒருமையில் பேசி இருக்கிறார்.

சேகரின் ஒருமையான பேச்சால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த செந்தில் சேகரை தாக்கியிருக்கிறார். இதில் காயமடைந்த சேகர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே பறந்து வழக்கு பதிவு செய்த காக்கிகள் தேமுதிக நகர செயலாளர் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

இந்த சம்பவத்தின் போது பழைய பேருந்து நிலையத்தில் இரு தரப்பிற்கும் கல்வீச்சி நடந்து நிர்வாகிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாக னங்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியிருக்கிறது. இதை கண்ட அதிமுகவினர் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img