img
img

கனிமொழியை தோற்கடியுங்கள்.. தூத்துக்குடியில் அமித்ஷா ஆவேச பிரச்சாரம்
செவ்வாய் 02 ஏப்ரல் 2019 16:57:56

img

தூத்துக்குடி

திமுக வேட்பாளர் கனிமொழி ஊழல்வாதி. அவரை தோற்கடித்து தமிழிசையை வெற்றி பெறச் செய்யுங்கள் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார். தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. அதில் தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசையை ஆதரித்து சங்கரப்பேரியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசுகையில் பாரத ரத்னா எம்ஜிஆரை நினைத்து எனது உரையை தொடங்குகிறேன்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வீரவணக்கம். பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனை நினைத்து இந்த கூட்டத்தில் உரையாற்றுகிறேன். அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மீண்டும் மோடி ஆட்சி அமைந்து அது ஏழைகளுக்கான ஆட்சியாகவே இருக்கும். பாஜக கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு சொல்கிறது.

அவ்வாறு வெற்றி பெற்று எதிர்கட்சிகளை காணாமல் போக செய்ய வேண்டும். காஷ்மீர் முதல் குமரி வரை பிரதமராக மோடியைத்தான் மக்கள் விரும்புகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானால் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யும் என உறுதியளிக்கிறேன்.

தென் மாநிலங்களை பாஜக கவனிக்காமல் இருந்தது இல்லை. கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஆ ராசா ஆகியோர் ஊழல்வாதிகள். இவர்கள் 3 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இவர்களை போல் பாஜகவினர் ஊழல்வாதிகள் அல்ல.

பயங்கரவாதிகளை அழிக்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் காங்கிரஸோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறது. நம் நாட்டின் மீது வெடிகுண்டு வீசுபவர்களை பழிவாங்க வேண்டுமா இல்லையா? காஷ்மீர் பிரச்சினையில் எந்தவித சமரசமும் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரை அமைச்சர்களாக்கியது பாஜக. தமிழிசை சவுந்தரராஜனுக்கு உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார் அமித்ஷா.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img