img
img

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கல் - கே.டி.ராஜேந்திரபாலாஜி
செவ்வாய் 02 ஏப்ரல் 2019 16:28:22

img

சாத்தூர்,

ஏப். 3- அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி  கூறியுள்ளார். 

சாத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியை கைப்பற்ற  நினைக்கிறார். அவர் முதல்- அமைச்சர் பதவி ஆசையில் வெறிபிடித்து அலைகிறார். மக்கள் நீதி மயம் கட்சி களத்திலேயே கிடையாது. ஜெயிக்க முடியாத கட்சி என்ன வேண்டுமானாலும் கூறலாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று  குறிப்பிடலாம். நாங்கள் எப்போதும் எங்களது சாதனையை கூறியே ஓட்டு கேட்போம். தி.மு.க. இந்த தேர்தலில்  அ.தி.மு.க.விடம் தோற்கும். அ.தி.மு.க. சினம் கொண்ட சிங்கம். தி.மு.க. மதம் கொண்ட யானை.

சினம் கொண்ட சிங்கத்திடம்  மதம் கொண்ட யானை தோற்று ஓடும். கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சரை குறை கூறுகிறார் மு.க.ஸ்டாலின். இப்போது அவரது கட்சியினர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டபோது ஏன் வாய் திறக்கவில்லை.  கொள்ளையடித்த பணம் இருந்தால் வரு மான வரித்துறையினர் சோதனை செய்யதான் செய்வார்கள். சாத்தூர் அ.ம.மு.க.  வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ரூ.40 கோடி பதுக்கி வைத்து ள்ளார். அவரது வீட்டிற்கு எப்போது வருமான  வரித்துறையினர் சோதனை வரும் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img