செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

 திமுக அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி - சரத்குமார்
திங்கள் 01 ஏப்ரல் 2019 13:44:43

img

திருவள்ளூர்,

ஏப். 2- தி.மு.க. அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று பூந்தமல்லி பகுதியில் நடந்த பிரசாரத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைதியநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  பூந்தமல்லியில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 2 தினங்களுக்கு முன்பு எனது பிரச்சாரத்தை தொடங்கினேன்.

அ.தி.மு.க. கூட்டணி பற்றி உங்களுக்கு தெரியும். மத்தியில் வலுவான ஆட்சி என்ற அடிப்படையில் இந்த கூட்டணி உருவாகி உள்ளது. புலவாமா தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு இல்லாமல் போய் விடுமோ? என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். ஆனால் எதிர் தாக்குதல் நடத்தி அந்த அச்சத்தை போக்கியவர் பிரதமர் மோடி. அவருடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது முதல் வெற்றி.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறுகிறார். 10 ஆண்டு களாக பேசாத  பிரதமரை வைத்துக்கொண்டு இருந்தவர்கள் தான் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளனர். காங்கிரஸ் காலத்தில் இருந்து  காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. 

காங்கிரஸ், தி.மு.க.வால் அன்று தொடங்கிய காவேரி பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஈழப்படு கொலை நடந்தபோது ஒன்றாக இருந்தார்கள். தற்போது வைகோவும் ஒன்று சேர்ந்து விட்டார். இதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி. இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img