img
img

பா.ஜனதா, அ.தி.மு.க.விற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்
திங்கள் 01 ஏப்ரல் 2019 13:38:40

img

திருச்செந்தூர், ஏப். 2- பா.ஜனதா, அ.தி.மு.க.விற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். 

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஆலந்தலை,  வீரபாண்டியன் பட்டணம் பகுதியில் அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் நாம் என்னென்ன அடக்கு முறைகளை சந்தித்தோம் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்களை பிரித்து ஆளக்கூடிய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத நீட் போன்ற திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மீது திணித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விட்டது. இதனால் வரும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக வாக்களித்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா.ஜனதா நம் மொழியை, கலாசாரத்தை, இனத்தை அடக்கி ஒடுக்கி இந்தியா என்பது ஒருமுக தன்மையுள்ள நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நம்மை பிரிக்க நினைப்பவர்கள் தான் பா.ஜனதாவினர். இதனை அறிந்து நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். நான் சோல்லவில்லை. தி.மு.க.வினர் சோல்லவில்லை. ஆனால் ஒரு ஆவறிக்கையின் படி இந்தியாவிலேயே மோசமான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று தெரி விக்கப்பட்டு உள்ளது. அந்த முதல்-அமைச்சர் தமிழ் நாட்டுக்கு தேவையா என்று மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். எனவே நாம் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img