வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

நாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு ஆதரவு
திங்கள் 18 மார்ச் 2019 17:23:21

img

சென்னை:

லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்த இரண்டு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி இதுவரை யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை என்பதால் பெரும்பாலும் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது.

இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. தமிழர் தேசிய ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலை வர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டியன் விடுதலைக் கழகத் தலைவர் ஆ.கி.ஜோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சிக்கு தமிழர் தேசிய விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், இஸ்லா மிய மக்கள் இயக்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட், இந்திய சுதந்திரா கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் கழகம், தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவை, இசுலாமிய சேவை சங்கம், தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மீனவர் முன்னணி, தமிழக இளையோர் எழுச்சிப் பாசறை, தமிழ் மீனவர் கழகம், கிருத்துவ மக்கள் மன்றம், வீரத்தமிழர் விடுதலைப் பேரவை, விடிவெள்ளி மக்கள் இயக்கம் ஆகியவை ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img