வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 
திங்கள் 18 மார்ச் 2019 17:02:32

img

வாஷிங்டன், 

மெக்சிகோ எல்லையில் மதில் சுவர் கட்டும் அவசர சட்டத்தை எதிர்க்கும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தால் நிராகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 26ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர்.  

இதனால் அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின் தெற்கு பகுதியில் எல்லை சுவர் கட்டுவதற்கு 800 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்யும் அவசரநிலை பிரகடனத்தை கடந்த மாதம் டிரம்ப் பிறப்பித்தார்.  இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியின் சார்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீது  நடந்த வாக்கெடுப்பில் டிரம்ப்பின் நிலைப்பாட்டை ஆதரித்து 182 உறுப்பினர்களும்  எதிராக 245 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.  

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தனது வீட்டோ  (சிறப்பு) அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரிக்கும் உத்தரவில் கையொப்பமிட்டார். இந்நிலையில், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை அனுமதிப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வரும் 26ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் நான்சி பெலோசி அறிவித்துள்ளார்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img