செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

சுதீஸ் என்னுடன் பேசினார், என்னவென்று கேட்டேன்... -துரைமுருகன்
புதன் 06 மார்ச் 2019 17:55:30

img

விஜயகாந்தின் மைத்துனர் சுதீஸ் என்னுடன் பேசினார். என்னவென்று கேட்டேன். நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி உங்களோடு வர விருப்பப்படுகிறோம்.  எங்களுக்கு நீங்கள் சீட் தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு நான் எங்கள் தலைவர் ஊரில் இல்லை.  இரண்டாவது, சீட் கொடுப்பதற்கு எங்களிடம் சீட் இல்லை. எல்லோருக்கும் கொடுத்துவிட்டோம்.  ஆக நீங்கள் எங்களுடன் வருவதாகக் கூறினீர்கள், அதன்பின் அங்கே போகிறீர்கள் இப்படி செய்தால் நாங்கள் என்ன செய்வது, மன்னிக்கவேண்டும் எனக் கூறிவிட்டேன். 

வீட்டிற்கு வந்தபிறகு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகேஷன் வந்திருந்தார்கள் அவரிடமும் நான் இதையேதான் கூறினேன். எங்களிடம் சீட் இல்லை, இப்போது வந்து என்ன பிரயோஜனம் எனக் கேட்டேன். ஏன் அங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் சரியானதாக தெரியவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் ஜெகத்ரட்சகன்,  ராணிப்பேட்டை காந்தி உடனிருந்தனர்.

நான் தெளிவாக கூறிவிட்டேன், எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என்று. சீட் கொடுப்பதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை, தலைவரிடம்தான் இருக்கிறது. எங்கள் தலைவரிடம் நான் கண்டிப்பாக விவாதிப்பேன். அவருக்கு ஃபோன் பண்ணேன் லைன் சரியாக கிடைக்கலை. இதற்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அப்படினு ஒரு பொண்ணு  சொல்லிட்டு இருக்கு. அதுக்கப்புறமும் தொடர்பு கொண்டேன், தூங்குகிறார் என்றார்கள். நான் பரவாயில்லை அது ஒன்றும் பெரிய அவசரம் இல்லை எழுப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நைட் வருவார் அவரிடம் பேசுவேன்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img