வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

அல்ஜீரியாவில் அதிபருக்கு எதிராக தீவிர போராட்டம் 
திங்கள் 04 மார்ச் 2019 17:48:00

img

 அல்ஜியர்ஸ்,

அல்ஜீரியாவில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் தற்போதைய அதிபருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அல்ஜீரியா நாட்டில்  வரும் ஏப்ரல் 18ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு 5ஆவது முறையாக போட்டியிடப் போவதாக தற்போதைய அதிபர் அப்தலசீஸ் போதேபிலிகா கடந்த ஜனவரி 28ஆம் தேதி அறிவித்திருந்தார். 

ஆனால், 81 வயது நிரம்பிய அதிபர் அப்தலசீஸ் போதேபிலிகா, நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  தலைநகர் அல்ஜியர்சில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு, அதிபர் பத விக்கு போதேபிலிகா போட்டியிடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக அதிருப்தி பதாகைகளை தாங்கி முழக்கங்கள் எழுப்பி னர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.  

அதிபர் மாளிகை உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸ் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டன.  இந்த எதிர்ப்புக்கு மத்தியில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img