வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

கோல்பீல்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளி திட்டத்திற்கு மூடுவிழாவா?
வெள்ளி 21 அக்டோபர் 2016 15:41:41

img

கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டுமானத் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசாங்கம் கை விட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பி, அப்பள்ளியின் பெற்றோர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கிள்ளான் மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இணையாக, சகல வசதிகளுடன் ஈஜோக் கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் நிர்மாணிக்கப்படும் என்று இதற்கு முன்பு மாநில அரசாங்கம் அளித்த வாக்குறுதி காற்றில் பறந்ததா என்றும் அவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். 2012-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற புதிய பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலத்தின் அப்போதைய மந்திரி புசாரும் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினருமான டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் இது பற்றிய மிகப்பெரிய அறிவிப்பினைச் செய்தார். அந்த வாக்குறுதியுடன் கூடிய எதிர்பார்ப்பு எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக அவர்கள் கூறினர். டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் அடிக்கல் நாட்டிய அப்பள்ளிக்கூட கட்டுமான பணிகளை நடப்பு மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கிடப்பில் போட்டுள்ளார் என்று பள்ளி வாரியத் தலைவர் பிரான்சிஸ் ராஜு (வயது 57) கூறினார். கோல்பீல்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளித் திட்டம் தொடருமா? அல்லது அத்திட்டம் மூடு விழா காணுமா? என்று பெற்றோர்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளதாக அவர் சொன்னார். இத்திட்டத்தை மாநில அரசு ஏன் இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது? மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் இது குறித்து ஏன் வாயே திறக்க மறுக்கிறார்? என்று கேள்வி எழுப்பிய பெற்றோர்களும் பள்ளி வாரியமும் மாநில அரசின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து கடந்த புதன்கிழமை அப்பள்ளியின் முன் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற முன்னாள் உறுப்பினரும் சிலாங்கூர் இந்தியர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான பெ.திருமூர்த்தி, கோலசிலாங்கூர் மஇகா தொகுதி காங்கிரஸ் தலைவர் ஜீவா என்ற குமாரசாமி சுப்பிரமணியம் ஆகியோர் பெற்றோர்களுக்கு ஆதரவு தெரிவித்து இதில் கலந்து கொண்டனர். பண்டார் ஸ்ரீகோல்பீல்ட் நகரமைப்புத் திட்டத்தில் அப்பள்ளியின் கட்டுமானம் இடம்பெற்றுள்ளது. சுமார் 87 மாணவர்கள் பயிலும் கோல்பீல்ட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளி திட்டத்திற்கு 3.9 ஏக்கர் பரப்பளவிலான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஆனால், மாநில அரசாங்கமோ இப்புதிய தமிழ்ப்பள்ளி கட்டுமானத் திட்டத்தைத் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என்று கட்டடக் குழுத் தலைவருமான பிரான்சிஸ் ராஜு குற்றம் சாட்டினார். கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டுமானத் திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு 20 லட்சம் வெள்ளி நிதியும், கேஎல் கெப்போங் மேம்பாட்டு நிறுவனம் 20 லட்சம் வெள்ளி நிதியும் ஒதுக்கியுள்ளதாக அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். ஆனால், தற்சமயம் இந்த நாற்பது லட்சம் வெள்ளி பள்ளி கட்டுமானத்திற்கு போதாது என்று மாநில அரசு புதிய கதையை அவிழ்த்து விடுகிறது. இந்த நிதி போதவில்லை என்றால் அதை ஈடு கட்ட வேண்டிய மாநில அரசாங்கமே நொண்டிச் சாக்குகளை கூறுவது முறையல்ல என்று அவர் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். இரண்டு பாலர் பள்ளிகள், 800 இருக்கைகள் கொண்ட மண்டபம், விளையாட்டுத் திடல், நவீன வசதிகள் கொண்ட வகுப்பறைகள் ஆகியன இப்புதிய பள்ளி கட்டுமானத் திட்டத்தில் அடங்கும். அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளி இறைத்த மாநில அரசாங்கம், தற்சமயம் இத்திட்டத்தை தாங்களே மேற்கொள்வதா? அல்லது பொது பணித்துறையிடம் ஒப்படைப்பதா? என்று தட்டுத் தடுமாறுவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரான்சிஸ் அந்தோணி (53), இவற்றுக்கு மாநில அரசு பெற்றோர்களிடம் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளிக்கு இணையாக கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி அமையும் என்று கூறி, ஆட்டுக் கொட்டகை போன்ற பள்ளியைக் கட்டுவதற்கு அது திட்டமிடுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், ஆட்டுக் கொட்டகை போன்றும் கோழிக் கூண்டு போன்றும் பள்ளி அமையுமானால் நாங்கள் அதற்கு எதிராக மாநில அரசின் தலைமையகம் முன்பே போராட்டத்தில் இறங்குவோம் என்று எச்சரித்தார். பள்ளி புதிய கட்டட கட்டு மான திட்டம் தொடர்பாக மாநில அரசுடன் பல தடவை பேச்சு நடத்தியிருப்பதாக பிரான்சிஸ் ராஜு தெரிவித்தார். கல்வியமைச்சு, சிலாங்கூர் மாநில கல்வி துறை, பொதுப்பணித் துறை, தெனாகா நேஷனல் நிறுவனம், கோல சிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், கல்வி அமைச்சு ஆகியோரை இதில் கலந்து கொண்டன. ஆனால் இது வரைவில் ஒரு தீர்க்கமான முடிவை மாநில அரசால எட்ட முடியவில்லை. பந்துவான் மோடால் - அரசாங்கத்தின் பகுதி உதவி பெரும் பள்ளி என்று காரணம் கூறி கோல்பீல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி புதிய கட்டுமானத் திட்ட விவகாரத் திலிருந்து கல்வியமைச்சு நழுவிக் கொண்டது. சம்பந்தப்பட்ட மன்றத் துறைகளோ மாநில அரசின் கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கின்றன. இந்த நிலைமை நீளுமானால் கோல்பீல்ட் தோட்ட புதிய பள்ளி கட்டுமானத் திட்டம் வெறும் கானல் நீராகி விடுமோ என்று நாங்கள் அச்சப்படுகிறோம். மறுபக்கம் பள்ளி பழைய கட்டடத்தைச் சுற்றிலும் மேம்பாட்டுப் பணிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. பள்ளியின் எதிர்காலம் இதனால் இருள் படர்ந்துள்ளது என்று பிரான்சிஸ் ராஜு கவலை தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img