செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

திமுக நிர்வாகிகளுக்கு 100 பவுன் தங்க நகை பரிசு!
வெள்ளி 22 பிப்ரவரி 2019 13:51:19

img

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தூத்துக்குடி தொகுதிக்கு உடபட்ட திருச்செந்தூர், ஸ்ரீவை குண்டம், ஓட்டப்பிடாரம் பகுதிகளின் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன். 
dmk

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் பறிமாறப்பட்டது. இதற்காக 2000 கிலோ மட்டன் , 2000 கிலோ சிக்கன் பிரியாணி என விருந்து களைக்கட்டியது. 

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி ஜெயிக்க வேண்டும். அதற்காக சிறப்பாக தேர்தல் பணியாற்றுங்கள். சிறப்பாக செயலாற்றி அதிக வாக்குகளை கனிமொழி அவர்களுக்கு பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு 100 பவுன் தங்க காசு பரிசளிக்கப்படும்" என  அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ள திமுக நிர்வாகிகள், பரிசினை தட்டிச் செல்லும் பொருட்டு, கனிமொழி அவர்களை 5 லட்சம் வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என சூளுரைத்து  செயல்பட்டு வருகின்றனர். அனிதா ராதா கிருஷ்ணனின் இந்த அதிரடி அறிவிப்பு திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img