img
img

`பலமான கூட்டணிக்காகப் பொறுத்துக் கொண்டோம்!' - 5 சீட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக பா.ஜ.க.
புதன் 20 பிப்ரவரி 2019 15:55:07

img

அ.தி.மு.க அணியில் 5 இடங்களை ஒதுக்கியதில் பா.ஜ.க தரப்பில் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `எங்கள் பக்கம் வராமல் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி 7 தொகுதிகளை வாங்கிக் கொண்டார் ராமதாஸ். எங்கள் வளர்ச்சியைத் திட்டமிட்டே தடுக்கிறார்கள்' என்ற குமுறலும் பா.ஜ.க வட்டாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. 

பியூஷ் கோயல்

சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சியும் அண்ணா தி.மு.க-வும் கூட்டணி உடன்பாட்டில் கையெ ழுத்திட்டன. பா.ம.க-வுக்கு 7 தொகுதிகளோடு சேர்த்து 1 ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. இதன்பிறகு மதியம் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பா.ஜ.க-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்ணா தி.மு.க அறிவித்தது. கூட்டணி உடன்பாடு முடிவுக்கு வந்ததை மகிழ்ச்சியோடு தெரிவித்தார் பியூஷ் கோயல். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் தென்படவில்லை. 

 

`5 இடங்களை ஒதுக்கியதில் அதிருப்தியா?' என தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் விசாரித்தோம். ``பா.ஜ.க தொண்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான். `எங்களுடைய எதிர்கால வளர்ச்சியையும் எடப்பாடி பழனிசாமி கெடுத்துவிட்டார்' என்றுதான் நிர்வாகிகள் குமுறுகின்றனர். பா.ம.க-வுக்கு 7 ப்ளஸ் ராஜ்யசபா சீட் என 8 இடங்களை உறுதிசெய்துவிட்டு பா.ஜ.க-வுக்கு 5 சீட் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வரப் போவது நாடாளுமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளர் என ராமதாஸ் சொன்னார். நாங்கள் யாரையும் முதல்வர் வேட்பாளர் எனக் கூறவில்லை. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை முன்னிறுத்தி, நாங்கள் 5.5 சதவிகித வாக்குகளை வாங்கினோம். 

அதே தேர்தலில் எங்கள் அணியில் போட்டியிட்ட பா.ம.க 4.5 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது. எங்களைவிட ஒரு சதவிகித வாக்குகளைக் குறை வாகப் பெற்ற அவர்களுக்கு 7 ப்ளஸ் 1 என ஒதுக்கியது எந்தவகையிலும் சரியான அளவுகோல் இல்லை. குறிப்பாக, 2014 தேர்தலில் 14 சீட்டில் தே.மு.தி.க பெற்ற வாக்குகளை நாங்கள் 8 சீட்டில் போட்டியிட்டு வாங்கினோம். 5 சீட்டுகளை ஒதுக்கியதன் மூலம், `பா.ஜ.க செல்வாக்கை இழந்து விட்டது' என அ.தி.மு.க தலைமை முடிவு செய்துவிட்டது போலத் தெரிகிறது. பா.ஜ.க வாக்குகளையும் இந்த அணிக்கு வரவிடாமல் செய்துவிட்டார்கள் எனத் தொண்டர்கள் வேதனைப்படுகின்றனர். இந்தத் தேர்தலிலும் பா.ம.க-வைவிட நாங்கள் அதிக வாக்குகளைப் பெறுவோம். எங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியும் ராமதாஸும் செயல்பட்டுள்ளனர்" எனக் கொந்தளித்தவர்கள், 

 

 

தமிழிசை

``எடப்பாடியும் ராமதாஸும் சேர்ந்துகொண்டு, `மாநில உரிமை' என்ற அடிப்படையில் இப்படிச் செய்துள்ளனர். `அன்புமணியை அமைச்சராக்கவில்லை' என்ற கோபத்தில், பா.ஜ.க பக்கம் பேசுவதற்கு வராமல் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார் ராமதாஸ். இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதால் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

ஆனால், கட்சித் தொண்டர்களும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களும் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் ஒன்றும் உள்ளது. கடைசி நிமிடம் வரையில் ரஜினி வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அமித் ஷா. அதனால்தான், `திராவிடக் கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன' என சென்னை வருகையின்போது பேசினார். கடந்த வாரம், `நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை' எனக் கூறி அறிக்கை வெளியிட்டார் ரஜினி. 

வானதி

`தேர்தலில் போட்டியில்லை' என ரஜினி கூறியதும், எங்களுக்கான ஆப்ஷனை எடப்பாடி பழனிசாமி குறைத்துவிட்டார். எங்களை ஆதரிப்பதாக ரஜினி கூறியிருந்தால்கூட சீட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால், ஒரு வாரம் கழித்து ரஜினி அறிக்கை வந்திருந்தால், இரட்டை இலக்கத்தில் இடங்களைப் பெற்றிருப்போம்.

இதனால்தான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பிலும் உற்சாகமில்லாமல் இருந்தார் தமிழிசை. பா.ம.க-வுக்கு 7, பா.ஜ.க-வுக்கு 5 என்பது சரியான கணக்கு அல்ல. எங்களுக்கு 9 தொகுதிகளாவது ஒதுக்கியிருக்க வேண்டும். `நம்மை வீழ்த்துவற்குப் பா.ம.க-வைப் பயன்படுத்திக் கொண்டார் எடப்பாடி பழனி சாமி' என்றுதான் தொண்டர்கள் மத்தியில் பேச்சு உள்ளது. கூட்டணிக்காக தி.மு.க-வுடனும் பேரம் பேசிய ராமதாஸுக்கு இத்தனை இடங்கள் ஒதுக்கியது நியாயமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்" என்கின்றனர் ஆதங்கத்துடன். 

பா.ஜ.க தரப்பின் அதிருப்தி குறித்து, தமிழக பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். ``தமிழகத்தில் பலமான கூட்டணி அமைக்கும்போது, சில கட்சிகள் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவது இயல்புதான். வெற்றிகரமான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. பாண்டிச்சேரியோடு சேர்த்து 40 தொகுதிகள் இருக்கக் கூடிய மாநிலம் இது. `மோடியோடு கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை' என்ற எதிர்க்கட்சிகளின் வாதம், இந்தக் கூட்டணியின் மூலம் முறியக்கப்பட்டுவிட்டது" என்றதோடு முடித்துக்கொண்டார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img