img
img

''டிக் டாக்'' செயலியை தடைசெய்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான்
செவ்வாய் 12 பிப்ரவரி 2019 16:46:53

img

தமிழகத்தில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான் என பாஜக தமிழக தலைவர் தமிழசைசவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சட்ட சபையில் இரண்டாம் நாள் விவாதமான இன்று மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி சட்டசபையில், ''டிக் டாக்'' எனப்படும் செயலியால் மாணவர்கள், பெண்கள் சீரழிந்து வருகின்றனர். மேலும் இந்த செயலியால் உருவாகும் வீடியோக்கள் பல வன்முறையை தூண்டி விடுகிற, சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்துகிற ஒன்றாகவும். வெளியாகும் வீடியோக்கள் ஆபாசமாக சித்தரிக்க ப்பட்டும் வருகிறது எனவே அரசு இந்த டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதற்கு பதிலளித்த தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், இதேபோல் இதற்கு முன் ப்ளுவேல் என்ற உயிரை கொல்லும் விளையாட்டானது  தடை செய்யப்பட்டது. அந்த ப்ளுவேல் கேம் தொடர்பான சர்வர் அமெரிக்காவில் இருந்தது. அங்கு தொடர்புகொள்ளப்பட்டு அந்த கேம் தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்த டிக் டாக் ஆப்பின் தலைமை இடம் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆப்பிற்கு  விரை வில் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.  

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழசைசவுந்தரராஜன்,தம்பிதுரையின் மக்களவை பேச்சு அதிமுகவின் கருத்தாக இருக்காது என்பது எனது கருத்து. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை மறுநாள் ஈரோடு வருகிறார். கட்சி தலைமை கேட்டுக்கொண்டால் மக்களவை தேர்தலில் போட்டி யிடுவேன். தமிழகத்தில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான்தான் என கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img