புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை புதைக்க தனி கல்லறை!
வெள்ளி 21 அக்டோபர் 2016 14:10:32

img

உலகிலேயே முதன் முதலாக கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை புதைக்க தனி கல்லறை ஒன்று சுவீடன் நாட்டில் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளில் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்ததாக சுவீடன் நாடு உள்ளது. இந்நாட்டில் சுமார் 76 சதவிகித மக்கள் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக கூறப்படுகிறது.இந்நிலையில், கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்தால், அவர்களின் சடலங்களை புதைக்கும் இடத்தில் சிலுவை சின்னம் வைப்பது வழக்கம். ஆனால், கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களின் சடலங்கள் புதைக்கும் இடத்திலும் சிலுவை சின்னம் வைப்பது உயிரிழந்தவரின் நம்பிக்கைக்கு எதிரானது என Josef Erdem என்ற ஆசிரியர் கோரிக்கை விடுத்தார்.மத்திய சுவீடனில் உள்ள Borlänge என்ற நகரை சேர்ந்த இந்த ஆசிரியர் உள்ளூர் கிறித்துவ தேவால யத்தை சேர்ந்த அதிகாரிகளிடம் இக்கோரிக்கை கொடுத்ததை தொடர்ந்து அது தற்போது ஏற்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேவாலயத்திற்கு அருகிலேயே ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டு அதில் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை புதைக்கவும், அவர்கள் விரும்பும் சின்னத்தை சடலம் புதைக்கும் இடத்தில் வைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாத Gunnar Lindgren என்ற ஆசிரியர் பேசியபோது, ‘இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், நான் இறந்த பிறகு எனது சடலம் புதைக்கும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிக்கும் சின்னத்தை வைப்பதை நான் விரும்ப வில்லை’ என பதிலளித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள

மேலும்
img
ஈபள் டவர் ஒளி  அணைக்கப்பட்டு அஞ்சலி

பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்

மேலும்
img
இலங்கை பலி விவரத்தை  தவறாக பதிவிட்ட டிரம்ப்!

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த

மேலும்
img
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்

மேலும்
img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img