வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த மாது பலி 
வியாழன் 24 ஜனவரி 2019 13:54:51

img

தைப்பே, 

பிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலியானார். தைவான் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை கிகி வூ (வயது 36).  இவர் மலை சிகரத்தில் ஏறும்பொழுது அதற்கான உடைகளை அணிந்து செல்வார்.  பின்னர் உச்சிக்குச் சென்ற பின் தன்னிடம் உள்ள பிகினி உடைகளை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொள்வார். 

இந்த புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவார்.  இதனால் பிகினி உடை மலையேற்ற வீராங்கனை என்ற பட்டப்பெயரும் இவருக்கு உள்ளது.  கடந்த வருடம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  கடந்த 4 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மலை சிகரங்களில் ஏறியுள்ளேன். 

என்னிடம் 97 பிகினி உடைகளே உள்ளன.  அதனால் தற்செயலாக சிலவற்றை மீண்டும் அணிந்து உள்ளேன் என வூ தெரிவித்து உள்ளார். நீங்கள் மலை உச்சிக்குச் சென்ற பின் பிகினி உடையை ஏன் அணிகிறீர்கள் என கேட்டதற்கு, அது மிக அழகாக உள்ளது.  அதனை ஏன் விரும்பக்கூடாது  எனக் கூறினார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் ஏறியுள்ளார்.  அப்போது 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உடலில்   பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்புப் படையினர் அவரை தொடர்ந்து தேடிய போது அவர் இறந்து காணப்பட்டார்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img