செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

ரஜினிபோல் சிகரெட் ஊதிய ரசிகர் ஒருவர் அடித்துக் கொலை
வியாழன் 24 ஜனவரி 2019 13:30:56

img

திருப்பூர் , 

“பேட்ட” படத்தை பார்த்துக் கொண்டே சிகரெட் பிடித்த ரஜினி ரசிகர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 

உடுமலையைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. கட்டட தொழிலாளியான இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர். கடந்த 12- ஆம் தேதி அங்குள்ள லதாங்கி என்ற தியேட்டரில் பேட்ட படம் பார்க்க மணிகண்ட பிரபு சென்றிருந்தார்.

அப்போது படம் பார்த்து கொண்டே ரஜினியை போல வாயில் சிகெரெட்டை பற்ற வைத்து ஸ்டைலாக ஊதி கொண்டிருந்தார். இதை பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கவனித்து விட்டு சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்.ஆனால் தன் தலைவன் படம் என்ற உற்சாகத்தில் சிகரெட்டை பிரபு தொடர்ந்து பிடித்து கொண்டே இருந்தார். இதனால் இருவருக்கும் தகராறு உருவானது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பக்கத்து சீட்டுக்காரர் பிரபுவின் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கி உள்ளார். பிறகு கீழே கிடந்த கட்டையை எடுத்து நடுமண்டையில் அடித்துள்ளார். இதில் பிரபு படுகாயமடைந்து இரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.படம் முடிவதற்குள்ளேயே இவ்வளவும் நடந்து முடிந்தது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பிரபு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பிரபு  உயிரிழந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது தியேட்டரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது தான் மேற்கண்ட விவரங்கள் போலீசார் கண்டு பிடித்தனர்.பிரபுவை தாக்கிய பக்கத்து சீட்டுக்காரர் அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பது அடையாளம் காணப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img