செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

எந்த அணியில் கூட்டணி வைக்கப்போகிறது பா.ம.க.? அழைப்புவிடுக்கும் கட்சிகள்!
செவ்வாய் 22 ஜனவரி 2019 18:18:22

img

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து தமிழகத்தில் கூட்டணிக் கணக்குகள் வேகமெடுத்துள்ளன. ஆளும் அ.தி.மு.க தரப்பு அடுத்த மாதத்துக்குள் கூட்டணிக் கணக்கை முடித்துவிடும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள். 

தேர்தலுக்கான அ.தி.மு.க கூட்டணிக் கதவுகள் திறந்தே இருக்கின்றன” எனக் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார், அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், பி.ஜே.பி-யை அ.தி.மு.க அணியில் இடம்பெறச் செய்வதற்கு அந்தக் கட்சிக்குள்ளே எதிர்ப்புகள் இருந்துவருகின்றன. இதுவரை அ.தி.மு.க கூட்ட ணியில் எந்தக் கட்சியும் இணையாத நிலையில் ஜெயக்குமாரின் இந்த அறிவிப்பு கவனிக்கத்தக்க விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஜெயக்குமார் அழைப்பு விடுத்ததன் பின்னணி தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தவும், பா.ம.க-வுக்குத் தூதுவிடவுமே இந்த அறிவிப்பு என்கிறார்கள், அ.தி.மு.க-வினர்.

பா.ம.க-வை இழுக்கும் அதிமுக

பி.ஜே.பி தரப்பிலிருந்து சிலர் தைலாபுரத்தைத் தொடர்புகொண்டு, `அ.தி.மு.க-வுடன் இணைந்து செயல்படுங்கள்' என்று சொல்லிவருகிறார்கள். அத னால்தான் அரசுக்கு எதிரான அறிக்கைகளில் கொஞ்சம் கவனமாகக் கையாண்டுவருகிறது, கட்சித் தலைமை. மறுபுறம், தி.மு.க தரப்பில் சிலர் பேசினா லும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினிடம் பாசிட்டிவ் பதில் ஏதும் இல்லாத நிலை இருக்கிறது. இப்போதைக்கு அ.தி.மு.க கூட்டணியை உறுதி செய்யும் நிலையே வரும் என்று தெரிகிறது” என்கிறார்கள். 

அ.தி.மு.க தரப்பிலோ, ``பா.ம.க-வின் தேர்தல் திட்டத்தை நாங்கள் அறியாமல் இல்லை. கடைசிவரை கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியி டாமல் அவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் கூடினால் மட்டுமே அதை அறிவிப்பார்கள். ஆனால், அ.தி.மு.க தரப்பிலிருந்து அவர்களுக்கு தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் 7 தொகுதிகள் வரை கொடுக்கலாம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. தர்மபுரி தொகுதியும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்ப டும். அதேபோல், இந்த ஆண்டு ராஜ்யசபாவில் சிலரின் பதவிக்காலம் முடிவடைவதால் பா.ம.க.-வுக்கு ஒரு சீட் தரவும் முடிவுசெய்துள்ளோம்.

அதிமுகவினர்

இந்தத் தகவல் தைலாபுரத்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் தரப்பிலிருந்து அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். ஆனால், பா.ம.க-வில் இருக்கும் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலர், தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளி யிடும் தகவலை முதல்வர் ரசிக்கவில்லை. `ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் பேரம் பேசுகிறார்களா' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார். அதேநேரம், `அவர்கள் நம்மிடம் வந்துவிடுவார்கள். தி.மு.க-வில் இப்போது உள்ள நிலையில் பா.ம.க எதிர்பார்க்கும் சீட் கிடைக்காது'  என்று முதல்வர் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியுள்ளார். 

 

 

அ.தி.மு.க தரப்பில் சொல்லப்படும் கருத்துகளை தி.மு.க தரப்பும் உறுதிபடுத்துகிறது. இப்போது தி.மு.க அணியில் உள்ள கட்சிகளுக்கே சீட் பிரித்துக் கொடுப்பதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளது. அதனால்தான் ஸ்டாலின், பா.ம.க-வை அணியில் இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் வந்தால் குறைந்தது ஐந்து தொகுதிகளுக்குமேல் எதிர்பார்ப்பார்கள். அதற்கு, இங்கு வாய்ப்பில்லை. ஆனால், அ.தி.மு.க-வுக்குத் தனது பலத்தைக் காட்டவே தி.மு.க-வுடன் பேச்சு நடப்பதாகத் தகவல்களைக் கசிய விடுகிறார்களா எனத்  தெரியவில்லை” என்கிறார்கள். 

பி.ஜே.பி-தரப்பு, பா.ம.க-வை அ.தி.மு.க அணிக்குள் கொண்டுவந்து அந்த அணியை வலுப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அதேபோல் தி.மு.க. கூட்டணியில் தங்களுக்குத் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற சந்தேகத்தில் இருக்கும் கட்சிகளுக்கு, ஜெயக்குமார் `கூட்டணிக் கதவு திறந்தே உள்ளது' என்று சொல்லி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியலைக் கையில் எடுத்துள்ளார்" என்கிறார்கள், பி.ஜே.பி தரப்பினர். 

வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பா.ம.க-வின் மாம்பழம், இந்த முறை யாருடைய கைகளுக்குச் செல்லும் என்பதை தைலாபுரம் தோட்டம் விரைவில் முடிவு செய்துவிடும் எனத் தெரிகிறது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img