திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 
வெள்ளி 11 ஜனவரி 2019 14:17:51

img

பாஸ்டன், ஜன.,

நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. இது மிகச்சிறிய கிரக மாகும். அமெரிக்காவின்  நாசா மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டுபிடிக்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது. 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் அருகே அதிக வெளிச்சத்துடன் கூடிய நட்சத்திரம் காணப்படுகிறது. இது குளிர்ச்சியான கிரகம். பூமியை விட 3 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த கிரகத்தில் பாறைகள் உள்ளன. 

எனவே உயிரினங்கள் வாழ தகுதியுடையவை. இங்கு அதிகளவில் கியாஸ் நிரம்பியுள்ளது. நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கிரகங்களை போன்று அடர்த்தியான வளி மண்டலத்தால் ஆனது. இங்கு அதிக அளவு நைட்ரஜன் வாயு உள்ளது. எனவே இங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது என்று மசாசூ செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் தெரிவித்துள்ளார்.  டி.இ.எஸ்.எஸ். விண்கலம் கடந்த 3 மாதங்களில் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img