வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

சமையல் எண்ணெய் விலை ஏற்றம்.
வியாழன் 20 அக்டோபர் 2016 08:53:03

img

தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் வேளையில் பலதரப்பட்ட சமையல் எண்ணெய் விலை ஏற்றம் காணவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்த மாதத்தில் சமையல் எண்ணெய் விலை உயரலாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய்க்கு அரசாங்கம் வழங்கி வந்த உதவித் தொகை அகற்றப்பட்டதால் இந்த விலையேற்றத்திற்கான காரணமாகும். அதே வேளையில் சமையல் எண்ணெய் விலை ஏற்றம் காணவிருப்பதை மலாயா சமையல் எண்ணெய் உற்பத்தி யாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கலப்பு எண்ணெயில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் 500 கிராம், 1 கிலோ கிராம்,2 கிலோ கிராம், 3 கிலோ கிராம்,5கிலோ கிராம் மற்றும் சுத்தமான செம்பனை எண்ணெயில் தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய் 500 கிராம், 1 கிலோ கிராம்,2 கிலோ கிராம், 3 கிலோ கிராம் ஆகியவை ஏற்றம் காணவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெ. 2.50 காசுக்கு விற்கப்படும் பாக்கெட்டில் உள்ள சமையல் எண்ணெய் வெ. 2.90 காசுக்கு உயர்வு காணவிருக்கிறது. இது அடுத்த மாதம் விற்கப்படும் புதிய விலையாகும். வெ. 13.35 காசுக்கு விற்கப்படும் 5 கிலோ கிராம் எடை கொண்ட ஒரு போத்தல் சமையல் எண்ணெய், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வெ. 15.25 காசுக்கு விற்பனை செய்யப்படும். சமையல் எண்ணெய் உயர்வு குறித்து நாளை வெள்ளிக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2017 பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017 பட்ஜெட் அறிவிக்கப்படும் வரையில் நிறைய வியாபாரிகள் இப்போது முதல் கொண்டு சமையல் எண்ணெயை பதுக்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img