img
img

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி
சனி 10 நவம்பர் 2018 16:53:17

img

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 75 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளித்துள்ளது.  கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து பாஜக ஆட்சிதான் மபியில் நடைபெற்று வருகிறது. ஆகையால் இந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக் விஜய் சிங், கமல்நாத் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டனர். சுமார் 75 வாக்குறுதிகள் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன, அதில் பாஜகவுக்கு போட்டியாக பல திட்டங்கள் இருக்கின்றன. பட்டியலில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

விவசாயிகளுக்கு பாதி மின் கட்டணம்.

விவசாயக் கடன் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.

வீடுகளுக்கு மின் கட்டணத்தில் முதல் 100 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம்.

வீடு இல்லதவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம். 450 சதுரடிக்கு வீடுகட்ட ரூ. 2.50 லட்சம் மானியத்தொகை. 

ஐடி நிறுவனத்தில் 1 லட்சம் பேருக்கு பணி.

ரூ. 300ல் இருந்து ரூ. 1000 ஆக சமூக பென்ஷன் உயர்த்தப்படும்.

பெண்களுக்கு முனைவர் பட்டம் வரை இலவச கல்வி.

பெண்களுக்கு  திருமண உதவித் தொகையாக ரூ. 51,000.

+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே-23 ஆம் தேதி கர்நாடகாவிலும் ஆட்சி மாற்றம்?

முதல்வர் பதவியை விட்டு கொடுக்கவும்

மேலும்
img
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியா?கட்காரியா?

இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் மோடி

மேலும்
img
தம்பிதுரைக்கு கண்டிஷன் போட்ட எடப்பாடி!

18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில்

மேலும்
img
சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம்; ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை

மேலும்
img
தீவிரவாதிக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பதே நல்லது..

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என நாம் நிறுவ முயற்சிக்கும்போது,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img