ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 
வியாழன் 08 நவம்பர் 2018 18:35:11

img

பாக்தாத், 

ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 6 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர். 

பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஏடன் நகரில் பஸ் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பின் போது குண்டு வெடித்தது. இதில் ஒரு ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அல்-சாகா நகரில் அரசு ஊழியர் ஒருவரின் காரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். இதை அறியாமல் அவர் அந்த காரில் பயணித்த போது குண்டு வெடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

சர்தார் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் பாக்தாத்தின் வடகிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 2 பஸ்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்

மேலும்
img
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை 

எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி

மேலும்
img
பாகிஸ்தானில் கனமழை 30 பேர் பலி

இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில்

மேலும்
img
பெருநாட்டின் முன்னாள் அதிபர்  தற்கொலை 

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img