img
img

கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 
வியாழன் 08 நவம்பர் 2018 18:33:28

img

யவுன்ட், 

கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் , ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குவது கேமரூன் நாடு. அந்த நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் உள்ளே புகுந்தனர். அங்கு படித்து வந்த 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 77 பேருடன் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். 

கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
இரண்டு வாரங்களில் 400 பேர் எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிப்பு

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானாவின்

மேலும்
img
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை 

ஈரான் படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா

மேலும்
img
5 இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார்     

அனைத்து நாடுகளிலும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி

மேலும்
img
அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்     

விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img