வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

நம்பிக்கை இருக்கிறதா?
வியாழன் 20 அக்டோபர் 2016 07:06:12

img

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய பிறகு வெளியே வந்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடனான மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசிய போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையின் நகலை தலைமைச் செயலாளரிடம் வழங்கினோம் என்றார்.மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார் ஸ்டாலின். தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு, தலைமைச் செயலாளரை நேரில் பார்க்கவில்லை. தீர்மான அறிக்கை நகலை அவரது அலுவலகத்தில் வைத்துள்ளோம் என்று ஸ்டாலின் பதில் அளித்தார். காவிரி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறதே என்ற கேள்விக்கு... நீதிமன்றம் என்பது வேறு, அது சட்ட ரீதியாக செல்ல வேண்டியது. அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களது உணர்வை வெளிப்படுத்துகிறோர்களே, அது போல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று ஸ்டாலின் பேசினார். மேலும், இந்த சந்திப்பில் நம்பிக்கை வந்துள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நம்பிக்கை இருப்பதால்தான் இங்கே வந்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி தந்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,

மேலும்
img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img