வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

900 பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை 
சனி 13 அக்டோபர் 2018 13:57:48

img

மாஸ்கோ, அக்.13-

ரஷ்யாவில் தன்னுடைய பாதுகாப்பில் இருந்த 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரனை வரலாற்றிலேயே மோசமான ஒரு குற்றவாளி என நீதிமன்றம் கூறியிருக்கிறது. 

ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் லிஷாவ்ஸ்கி - ஓல்கா  தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் இந்த தம்பதியர் ஒன்பதுக்கும் அதிகமான சிறுவர்-சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இவர்களுக்கு மாநில அரசின் சார்பில் மாதம் தோறும்  265 பவுண்டுகள் நிதியாக வழங்கப்படுகிறது. காலணி கடை ஒன்றினை நடத்தி வந்த விக்டர்,  தான் வளர்த்த 12 முதல் 17 வயது வரை உள்ள சிறுமிகளை ஐந்து ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். 

ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமி, ஓல்காவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ஓல்கா உடனடியாக போலீசாருக்கு  தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  குற்றவாளி விக்டரை  கைது செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து கூறிய ஓல்கா  ஐந்து ஆண்டுகளாக எனக்கு தெரியாமலேயே இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இதுகுறித்து எந்த சிறுமியும் என்னிடம் கூறவில்லை. ஏனெனில் அனைவருமே அவரை தங்களுடைய தந்தையாகவே கருதி வந்தனர் என தெரிவித்தார். 

இந்த நிலையில் குற்றவாளி விக்டரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்பொழுது குற்றவாளி சிறுமிகளை கொடுமைப்படுத்தி தன்னுடைய பாலியல் அடிமைகளாக 900-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. ரஷ்ய நாட்டின் வரலாற்றிலேயே விக்டர்தான் மோசமான ஒரு குற்றவாளி என தெரிவித்த நீதிபதி, அவனுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img