செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

ஜெலுத்தோங் அறங்காவலர் வாரிய சொத்துக்கள் இந்தியர்களுக்கே!
செவ்வாய் 18 அக்டோபர் 2016 13:34:51

img

ஜெலுத்தோங் பகுதி இந்திய மக்களுக்கென உருவாக்கப்பட்ட அறம் வாரிய சொத்துகள் அப்பகுதி இந்திய மக்களின் நலனுக்கே சென் றடைய வேண்டும் எனவும் அறங்காவலராக இருந்த மு.சுப்பிரமணியம் அதிகார துஷ் பிரயோகம் புரிந்துள்ளார் எனவும் பினாங்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. மக்களுக்காக உருவாக்கப்பட்ட அறத்தை தன் நலத்திற்காக மு.சுப்பிரமணியம் உரிமை கொண்டாடியதை எதிர்த்து ஜெலுத்தோங் இந்தியர்களின் சார்பில் அவர் மீது வழக்கு தொடுத்தனர். கடந்த 1896ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அறத்தில் ஜெலுத்தோங் பகுதி மக்களுக்கு ஒரு கோவிலும் ஓர் இடுகாடும் இருக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. நாளடைவில் அறங்காவலர்கள் இறந்து விட்ட நிலையில் உயிரோடு இருந்த முத்தையா தேவர் தான் இறப்பதற்கு முன் மு.சுப்பிரமணியத்திடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்து அறங்காவலராக நியமித்துள்ளார். ஆனால் மு.சுப்பிரமணியம் இடுகாட்டு நிலத்தில் புதைக்கப்பட்ட 180 சடலங்களை வெளியெடுத்து அவருக்கென வீடு கட்டிக் கொள்ள பொய்யான ஆவணங்களை கடந்த 1999, 2000ஆம் ஆண்டுகளில் தயார் செய்துள்ளார். மேலும் கடந்த 2010ஆம் ஆண்டு சிஐஎம்பி வங்கியில் நிலத்தை அடகு வைத்து 35 லட்ச வெள்ளியையும் பெற்றுள்ளார். அதுபோக நிலத்தில் அமைந்துள்ள கோவிலை அழிக்கப் போவதாகவும் நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளார். இந்திய மக்களின் நலனை காப்பாற்ற பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது. வழக்கை செவிமடுத்து மு.சுப்பிரமணியத்தின் சாட்சிகள்தான் சுயநலத்திற்காகத்தான் நிலங்களை பயன்படுத்தியுள்ளார் என நீதிபதி ஹடாரியா தீர்ப்பை வழங்கியது பெரும் மகிழ்ச்சி என வழக்கறிஞர்களாக ஜி.கே.கணேசன், லலிதா மேனன் ஆகியோர் தெரிவித்தனர். மு.சுப்பிரமணியம் தனது பாதுகாப்பில் இருக்கும் நிலம், ஆவணங்களை அனைத்தையும் 90 நாட்களுக்குள் புதிய அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோ.சுப்பையா, மா.சுப்பிரமணியம், அ.நாராயணன், த.காளிமுத்து, கோ.ராஜப்பா ஆகிய ஐவரும் அறத்தின் புதிய அறங் காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐவரும் அறத்தின் வழி மக்களுக்கு முறைகேடின்றி சேவை செய்ய வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதே வேளையில் அறங்காவலர்களோடு இணைந்து இவ்வட்டார மக்களுக்கு ஜெலுத்தோங் ராஜகாளியம்மன் ஆலயமும் தகுந்த சேவைகளை வழங்குவதோடு நிர்வாகமும் முறையாகவே நடைபெறும். நவராத்திரி போன்ற விசேஷங்களுக்கு இந்த ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்றது என ஆலயத்தின் தலைவர் ம.பத்மநாதன் குறிப்பிட்டார். உண்மை ஒரு நாள் வெல்லும் என்பதற்கேற்ப எங்களுக்கு பல வருட போராட்டத்திற்கு பிறகு நீதி கிடைத் திருப்பது கடவுள் வரம் போன்றது என அவர் மேலும் சொன்னார். வழக்கு வெற்றியடைந்தாலும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த கோவில் நிர்வாக உறுப்பினர்கள், அறங்காவலர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வழக்கை ஏற்று நடத்திய வழக்கறிஞர்கள் ஜி.கே.கணேசன், லலிதா மேனன் தங் களுக்கு பல வகையில் உதவிய பினாங்கு மாநில புதல்வர் பேராசிரியர் ராமசாமி ஆதரவு வழங்கி மக்களுக்கு அவர்கள் நன்றியை சமர்ப்பித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img