செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

`தி.மு.க தூக்கி எறிந்துவிட்டது; தேசிய அரசியலில் களமிறங்குகிறேன்!’ - டி.ராஜேந்தர்
செவ்வாய் 25 செப்டம்பர் 2018 14:59:54

img

சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``88 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஸ்டாலினால் என்ன செய்ய முடிந்தது. வரும் அக்ட்டோபர் 3-ம் தேதி, கட்சியின்  பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி என்னுடைய 64-வது பிறந்தநாள். ஒரு காலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட என்னுடைய பிறந்தநாள், இன்றெல்லாம்  அவ்வளவு பெரிதாகக் கொண்டாடுவது இல்லை. ஆனால், வரும் பிறந்தநாளன்று கட்சி சார்பாக புதிய முடிவுகளை எடுக்க இருக்கிறேன்.இனி, நான் தேசிய அரசியலில் ஈடுபட இருக்கிறேன்.

 
 
 
எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா, கலைஞர் எல்லாம் அழைத்தும் நான் அரசியலுக்குச் செல்லவில்லை. ஆனால், வரும் அக்டோபர் 3-ம் தேதி என்னுடைய பிறந்தநாள் அன்று, பொதுக்குழு கூட்டப்பட்டு, ஆதரவாளர்களுக்கு  புதிய உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டும், புதிய கிளை உறுப்பினர்களைப் பணி அமர்த்த உள்ளேன். அதுமட்டுமில்லாமல் கோவை , ஈரோடு,அரியலூர் என தொடர்ச்சியாக மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளோம்.
 
''செக்கச் சிவந்த வானம்'' திரைப்படம் வெளியானதற்குப் பின்பு ரசிகர் மன்றம் புனரமைக்கப்படும். காழ்ப்பு உணர்ச்சி காரணமாக நடிகர் சங்கம், தயாரிப்பா ளர் சங்கம் செயல்படுகிறது. சிம்புவை நடிக்கவைத்த மணிரத்தினத்தின் மனிதத்தன்மைக்கு நன்றி ” என்றார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img