வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

ஐஎஸ் தீவிரவாதிகளை விரட்டாமல் விடமாட்டோம்.
செவ்வாய் 18 அக்டோபர் 2016 13:03:50

img

ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஈராக்கின் முக்கிய நகரான Mosul-ஐ நிச்சயம் கைப்பற்றுவோம் எனவும் அதற்கான ராணுவ பணிகள் தொடங்கி விட்டதாகவும் ஈராக் பிரதமர் Haider -al- Abadi நம்பிக்கை தெரிவித் துள்ளார். ஈராக் நாட்டில் உள்ள பெருநகரமான Mosulலில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நகரை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள், அப்பகுதி முழுவதையும் இஸ்லாமிய இடமாக மாற்ற போவதாக அறிவித்தனர். இரண்டு வருடங்களாக தங்கள் நகரை மீட்க ஈராக் ராணுவம் போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பு கருதி வெளியேறுகின்றனர். இனி பொறுக்க முடியாது என ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் இருந்து Mosul நகரை மீட்க முழு வீச்சில் தாக்குதல் நடத்தப்போவதாக ஈராக் பிரதமர் கூறியுள்ளார், இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் ஆலோசனை செய்யும் விடயம் இன்று நடைப்பெற்றது. ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கடைசி வலுவிடமாக Mosul விளங்குகிறது. ஈராக்குக்கு அமெரிக்க உதவி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அந்த நகரை சுற்றி 3 லட்சம் ராணுவ படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு வாழும் மக்கள் பத்திரமாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் வெற்றி நமதே எனவும் பிரதமர் Haider -al- Abadi கூறியுள்ளார். இதனிடையில் அங்கு பத்தாயிரம் ஐ.எஸ் தீவிராவாதிகள் பதுங்கியிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள

மேலும்
img
ஈபள் டவர் ஒளி  அணைக்கப்பட்டு அஞ்சலி

பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்

மேலும்
img
இலங்கை பலி விவரத்தை  தவறாக பதிவிட்ட டிரம்ப்!

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த

மேலும்
img
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்

மேலும்
img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img