வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியில்லை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 03 செப்டம்பர் 2018 14:45:20

img

சென்னை மெரினா கடற்கரையில் எவ்வித போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி, அய்யாக்கண்ணு தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி தந்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது - தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அமர்வில் நடைபெற்றது. அப்போது, மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனு மதித்தால், தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

மேலும், வள்ளுவர் கோட்டம், அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளிட்ட இடங்க ளில் மட்டுமே போராட்டம் நடத்தலாம் என்றும் தமிழக அரசு வாதிட்டது. தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசின் மேல்மு றையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டனர். மெரினாவில் எவ்விதப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
சிறுமியை 28 நாட்கள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்...படுகாயமடைந்த சிறுமி....

அச்சிறுமியிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில்

மேலும்
img
நடிகை விஜயசாந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க ராகுல்காந்தி உத்தரவு

தேர்தல் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் மொத்தம் 50

மேலும்
img
பிரனயை கொலை செய்ய காரணம் அந்த வீடியோதான் -தெலுங்கானா ஆணவக்கொலை விவகாரம்

பிரனய்-அம்ருதா திருமணம் செய்துகொண்டபோது,

மேலும்
img
சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு விசாரணை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

மேலும்
img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img