செவ்வாய் 25, செப்டம்பர் 2018  
img
img

தாழ்த்தப்பட்டவா்களுடன் தங்கமாட்டோம்;கேரளாவில் நிவாரண முகாம்களில் ஜாதி பிாிவினை!!
புதன் 22 ஆகஸ்ட் 2018 15:39:49

img

கேரளாவில் நிவாரண முகாம்களில் தாழ்த்தப்பட்டவா்களுடன் சோ்ந்து இருக்க மாட்டோம் என்று  ஒரு ஜாதியினா் போா்க்கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஏற்படுத்திய பாதிப்பில் வீடுகள் மற்றும் உடமைகள் இழந்தவா்களை மாநிலம் முமுவதும் உள்ள 3446 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாம்களில் தங்கியுள்ளவா்களின் பெரும் சோகத்தில் இடையில் ஜாதி ரீதியான பிாிவினை ஏற்பட்டுள்ளது.

ஆலப்புழை பள்ளிபாடு எல்.பி. ஆரம்ப பள்ளியில் உள்ள முகாமில் 50 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதில் 22 குடும்பத்தினா் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிாிவினா் 28 குடும்பத்தினா் மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவா்கள். இந்த நிலையில் மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவா்கள் எங்கள் வீட்டில் கூலி வேலை செய்யும் தாழ்த்தப்பட்டவா்களுடன் தங்க மாட்டோம் அவா்கள் சமைக்கிற சாப்பாட்டையும் சாப்பிட மாட்டோம் கழிவறையும் பயன்படுத்த மாட்டோம் என கூறி பள்ளிப்பாடு 3-ம் வாா்டு கவுன்சிலா் தலைமையில்  போா்கொடி தூக்கினாா்கள். 

இதனால் அந்த முகாமுக்கு அதிகாாிகள் சென்றனா். அப்போது அவா்கள் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனா். இதனால் அந்த  மாப்பிளைன்ஸ் கிறிஸ்தவ 28 குடும்பத்தினரை வேறு முகாமுக்கு அதிகாாிகள் மாற்றினாா்கள். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சமூக நீதிக்கு எதிராக போராடிய மண் தான் கேரளா. தற்போது நூற்றாண்டு கடந்த பிறகும் ஜாதி பிாிவினை இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே உதாரணமாக அமைந்துள்ளது.

இதற்கு அதிகாாிகளும் உடந்தையாகதான் இருக்கிறாா்கள் என்பது அவா்களின் செயல்பாடு மூலம் தொிகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனா். எதிா்கட்சி  தலைவரான காங்கிரஸ் ரமேஷ் சென்னிதலயின் மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு சென்ற ரமேஷ் சென்னிதலயிடம் எங்களை இங்கும் ஒதுக்கி றாா்கள் என்று தாழ்த்தப்பட்ட அந்த மக்கள் கூறியதற்கு அவா் உங்களுக்கு அாிசி பருப்பு வேணும்னா தாரேன் இதில் ஒன்றும் செய்ய முடியாது என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டாா் என்று அந்த மக்கள் கூறியுள்ளனா். இந்த சம்பவம் பிணராய் விஜயன் வரை சென்று அவா் கலெக்டா்  மூலம் விசாாிக்க உத்தரவிட்டுள்ளாா்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
`தி.மு.க தூக்கி எறிந்துவிட்டது; தேசிய அரசியலில் களமிறங்குகிறேன்!’ - டி.ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன

மேலும்
img
`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை

`ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தை

மேலும்
img
`இரண்டாம் நம்பர் பிசினஸ்; கலப்பட கருப்பட்டி!' - கருணாஸை முடக்கும் எடப்பாடி பழனிசாமி

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர்

மேலும்
img
ரஃபேல் விவகாரம் ...ஃப்ரான்ஸ் செல்ல இருக்கும் நிர்மலா சீதாராமன்

ஆளும் பாஜகவுக்கு இது பெரும் நெறுக்கடியை

மேலும்
img
"அவர் பேசுனது தப்புதான்; ஆனா, அரசை விமர்சிக்க உரிமையில்லையா?!" கிரேஸ் கருணாஸ்

அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img