வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

விஜய் ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த கேரள மக்கள்!
திங்கள் 20 ஆகஸ்ட் 2018 17:32:45

img

திண்டுக்கல் மாநகர தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளாவிற்கு இரண்டு இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், ரவுண்டுரோடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் ஜி.வினோத். இவர் இளைய தளபதி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார். அழகிய தமிழ்மகன் என்ற ரசிகர்மன்றத்தின் தலைவராக இருக்கும் விஜய் வினோத், ஒவ்வொரு மாதமும் விஜய் பிறந்த தேதியன்று பல்வேறு பகுதிக்குச் சென்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போது மாநகர தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் மாநகர தலைவராக உள்ளார். தற்போது கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வண்ணம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் ரூ இரண்டு இலட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, கைலி, துண்டு, நைட்டி, மற்றும் சிறுவர்களுக்கான பால்பவுடர்கள், பிஸ்கட் உட்பட நிவாரண பொருட்களை வேன்கள் மூலம் எடுத்துச்சென்று கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மற்றும் அதன் அருகில் உள்ள கச்சிகட்டி கிராமப்பகுதிகளுக்கு சென்று வழங்கினார். நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கேரளா மக்கள் தமிழக மக்களுக்கும் விஜய் மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img