வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

ஆறு மணி நேர வேலை முறை போராட்டம் தொடரும்.
வியாழன் 13 அக்டோபர் 2016 15:54:53

img

அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்ட ஆறு மணி நேர வேலை முறைக்கான தனது ஆலோசனை நிராகரிக்கப் பட்டுவிட்ட போதிலும், இந்த புதிய வேலை நேரத்திற்காக தொடர்ந்து போராடப் போவதாக மலேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (எம்டியூசி) நேற்று சூளுரைத்தது. இந்த ஆலோசனை அரசாங்க ஊழியர்களை மட்டும் கருத்தில் கொண்டு தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அந்நிய நாட்டினர் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் உட்பட ஒரு கோடியே 42 லட்சம் தொழிலாளர்களுக்கா கவும் இந்த பரிந்துரை முன்மொழியப் பட்டிருக்கிறது என்று எம்டியூசி பொதுச்செயலாளர் என்.கோபால் கிருஷ்ணன் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டது. இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்த பணி நேர அமலாக்கத்தைப் பற்றி பல ஐரோப்பிய நாடுகளிலும் ஸ்காண்டினேவியாவிலும் ஆய்வுகள் நடத்திய பின்னரே இந்த ஆலோசனை முன்மொழியப்பட்டது. இந்த வட்டாரத்தில் உள்ள தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்பட் டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட நாடுகளின் உற்பத்தித் திறன் பாதிப்படையவில்லை என்று அவர் கூறியதாக அந்த நாளிதழ் தெரிவித்தது. எம்டியூசி மீண்டும் மனிதவள அமைச்சை சந்தித்து சங்கத்தின் ஆலோசனையைத் தெரிவிக்கும் என கோபால் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆறு மணி நேர வேலை முறை, மருத்துவ விடுப்பு நாட்களைக் குறைக்கும் என்று கோபால் குறிப்பிட்டார். சுவீடனில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆறு மணி நேர வேலை முறை மலேசியாவிற்கும் தேவை என எம்டியூசி அக்டோபர் 5ஆம் தேதி வலியுறுத்தியது.இந்த பணி நேர மாற்றம் மலேசிய தொழிலாளர்களின் தேக ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது என எம்டியூசி தலைவர் முகமட் காலிட் அடான் கூறியதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்தது. அரசாங்க சேவையில் ஆறு மணி நேர வேலை முறையை அறிமுகப்படுத்தும்படி கோரும் ஆலோசனை தெரி விக்கப்பட்டு வந்த போதிலும், அரசாங்க ஊழியர்களுக்கான நடப்பு வேலை நேரமே தொடருமென அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா நேற்று முன்தினம் கூறியிருந்தார். கியூபெக்ஸ் தெரிவித்த இந்த ஆலோசனை பரிசீலிக்கப்பட்டதாகவும் இந்த வேலை முறை அரசாங்க சேவைக்கு பாதிப்பைக் கொண்டு வருமென தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img