ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

வீட்டுமனைக்கான நிலம் தனிநபரால் ஆக்கிரமிப்பு!
வியாழன் 13 அக்டோபர் 2016 15:53:12

img

தஞ்சோங் காராங், கம்போங் சுங்கை யூ இந்திய விவசாயி களின் வீட்டுமனைத் திட்டத் தில் செம்பனை பயிரிட்டுள்ள நபர் ஒருவருக்கெதிராக கோல சிலாங்கூர் மாவட்ட காவல் நிலைய தலைமை யகத்தில் புகார் செய்யப் பட்டது. கடந்த ஓராண்டிற்கு முன்னர் அந்த நபர் தன்னுடைய சுய விருப்பத்தின் பேரில் சட்ட விரோதமாக அந்நிலப் பகு தியை ஆக்கிரமித்துக் கொண் டுள்ளதாக அங்குள்ள இந்திய விவசாயிகள் சிலர் முறையிட்டனர். சம் பந்தப்பட்ட நிலத்தில் இதற்கு முன்னர் அமைந்திருந்த விளையாட்டு மைதானத்தில் அந்த நபர் ஓராண்டிற்கு முன்னர் செம் பனை கன்றுகள் பயிரிட்டதாகவும் அந்நபரின் இந்த அத்துமீறலை கோலசிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம் கண்டிக்காதது ஏன் என்று அந்த இந்திய விவசாயிகள் கேள்வி எழுப்பினர். கம்போங் சுங்கையூ இந்தியர் விவசாய பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் முனியாண்டி குடியேற்றவாசிகள் சார்பாக அந்நபருக்கு எதிராக புகாரை செய்தார். அந்நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட நில அலுவலகத்திடம் கடிதம் வழங்கப்படும் என்று அப்புகாரில் புருஷோத்தமன் முனியாண்டி குறிப்பிட்டார். கம்போங் சுங்கையூ, ஜாலான் கம்போங் இந்தியாவில் சம்பந்தப்பட்ட விளையாட்டு மைதானம் அந்நபரால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிலாங்கூர் மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முறையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட விளையாட்டு மைதானத்தின் சுய விருப்பத்தின் பேரில் செம்பனைப் பயிரீடு செய்துள்ள அந்நபருக்கு மாவட்ட நில அலுவலகம் அனுமதி அளித்ததா? அல்லது அந்நபர் சட்டவிரோதமாக இந்த நடவடிக் கையில் ஈடுபட்டாரா என்பதை மாவட்ட நில அலுவலகம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்த இந்திய விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கத்தால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைக்கான நிலத்தை ஏற்கெனவே ஒருநபர் பராமரித்து பாதுகாப்பதாகக் கூறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இத னால் மேற்பட்டத் திட்டத்தில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் அத்தனி நபர்களின் நட வடிக்கைகளினால் ஒவ்வொன்றாக பறிபோய்க் கொண்டிருப்பதாக அவர்கள் மேலும் விவரித்தனர். சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும் மாநில நிலக்குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியிடமும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img