திங்கள் 24, ஜூன் 2019  
img
img

ஜமாலின் செயல்கள் அம்னோவைப் பிரதிபலிக்க்கவில்லையாம்.
வியாழன் 13 அக்டோபர் 2016 15:49:13

img

சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகமட் யூனுசின் சொல்லும் செயலும் அம்னோவைப் பிரதிபலிப்பதாகக் கருதக் கூடாதாம் என்று மூத்த அமைச்சரும் அம்னோ உச்சமன்ற உறுப்பின ருமான டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் புதிய வியாக்கியானம் செய்துள்ளார். சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமையேற்றுள்ள ஜமால் தனிப்பட்ட முறையில்தான் பேசுகி றார். செயல்படுகிறார் என்று சுற்றுலா, பண்பாட்டு அமைச்சருமான நஸ்ரி மீண்டும் வலியுறுத்தினார். அம்னோவில் 198 தொகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுக்குத் தலைவர்தான் ஜமால். அவரது சேட் டைகளை வைத்து எல்லாத் தொகுதித் தலைவர்கள் மீதும் பழி போடுவது நியாயமல்ல என்று நஸ்ரி கூறினார். அவர் என்ன செய்கிறாரோ அது எங்களைப் பிரதிபலிக்கவில்லை. ஒரு மனிதர் மற்ற 197 தொகுதித் தலைவர்களுக்காகவும் பேச முடியாது. யாராக இருந்தாலும் சட்டத்தை மீறக் கூடாது என்பதையும் நஸ்ரி அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். சட்டத்தை மீறினால் ந வடிக்கை எடுக்கத்தான் வேண்டும் என்றார் அவர். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சிவப்பு சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகமட் யூனுசின் திட்டங்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று நேற்று முன்தினம் கெராக்கான் இளைஞர் பகு தியைக் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த இயக்கத்துக்கும் அம்னோவுக்கும் தொடர்பில்லை என்று ஜமாலும் சில அம்னோ தலைவர்களும் கூறிக்கொண்டாலும் ஜமால் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் என்பதை கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி யோங் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் அம்னோ தலைவரால் சுங்கை பெசார் தொகுதித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோன்று அதில் சம்பந்தப்பட்ட மற்ற அம்னோ உறுப்பினர்கள் மீதும் நட வடிக்கை எடுக்கலாம் என்று அவர் தெரிவித்து இருந்தார். எந்தத் தரப்பினருக்கும் ஒன்றுகூடவும் சட்டப்பூர்வமாக ஆர்ப்பாட்டம் செய்யவும் உரிமை உண்டு .ஆனால், சிவப்பு சட்டை இயக்கத்தினர் வன்செயல்களில் ஈடுபடுவதை யோங் சுட்டிக்காட்டினார். அண் மையில் தெலுக் இந்தான், சபாக் பெர்ணம் , பினாங்கில் ‘கர்னி டிரைவ்’ ஆகிய இடங்களில் பெர்சே 5 வாகன அணிகள் மீது சிவப்பு சட்டையினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
img
அஸ்மினும் நானும் 2016-இல்தான் அன்னியோன்யமானோம்

2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img