புதன் 20, மார்ச் 2019  
img
img

அன்வார் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
வியாழன் 13 அக்டோபர் 2016 15:37:48

img

தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஓரினப் புணர்ச்சி குற்றச் சாட்டிலிருந்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுதலை பெறுவாரா என்று நேற்று மிகவும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்ட வழக்கு விசார ணையில், திருப்பு முனையாக கூட்டரசு நீதிமன்றம் அதன் தீர்ப்பை ஒத்தி வைத்தது. மலாயா தலைமை நீதிபதி டான்ஸ்ரீ சுல்கிப்லி அஹ்மட் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் பிரிதொரு தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர். எனினும், அதற்கான தேதி இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தான் எதிர்நோக்கியிருக்கும் இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் குற்றச்சாட்டையும், சிறைத்தண்டனை யையும் ரத்துச்செய்யக் கோரி தண்டனை மறு ஆய்வு விண்ணப்பத்தை அன்வார் செய்திருந்தார். அன்வார் சார்பில் ஆஜரான கூட்டரசு நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம், அரசு தரப்பு வழக்கறிஞரான டத்தோ அஹ்மட் கமால் முகமட் ஷாஹிட் இருவரும் நீதிமன்றம் முன்னிலையில் நேற்று தங்கள் வாதத்தொகுப்பை சமர்ப்பித்தனர். மரபணு மற்றும் குற்றம் நிகழ்ந்த இடம் சம்பந்தமான ஆதாரங்கள் இந்த மறுஆய்வு விண்ணப்பத்திற்கு அவசியமில்லாதது என அஹ்மட் கமால் தனது வாதத்தொகுப்பில் கூறினார்.எனினும், குற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இடத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறி, அதன் முக்கியத்துவம் குறித்து வாதாடினார் ஸ்ரீ ராம். இந்த வழக்கின் ஆதாரங்களின்படி, குற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது 11-5-1 என்ற வீட்டில். ஆனால், சம்பவ இடத்தில் கம்பளம் எதுவும் காணப்படவில்லை என்பதை விசாரணை காட்டுகிறது. பக்கத்தில் உள்ள 11-5-2 என்ற வீட்டில் அந்த கம்பளம் காணப்பட்டதாக மூத்த வழக்கறிஞரான ஸ்ரீ ராம் குறிப்பிட்டார்.அந்த கம்பளத்திலோ அல்லது துண்டிலோ சாத்தியப்பூர்வமான ஆதாரங்கள் காணப்படவில்லை என்றும் அவர் சொன்னார். இதற்கு முன்பு, தன் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் கடந்த 2015 பிப்ரவரி 10-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வழக்கில் புதிய நீதிபதிகள் குழு இடம்பெற வேண்டும் என்ற அன்வாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கு விசாரணையிலிருந்து அந்நீதிபதிகள் விலகிக்கொள்வதற்கு சிறப்பு காரணங்கள் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், ஒரு நியாயமான விசாரணை நடத்தப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்தது. இந்த மறுஆய்வு விண்ணப்பத்தை அன்வார் இப்ராஹிம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி செய்திருந்தார். அவர் தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.

நேற்று முன்தினம் மேற்கொண்ட சிறப்புச் சோதனை வழி

மேலும்
img
மலேசியர்களை மணம் புரியும் வெளிநாட்டவரின் தற்காலிக வேலை அனுமதி ரத்து. 

இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை

மேலும்
img
இந்தோனேசியாவில் நிலநடுக்கம். மலேசிய பத்திரிகையாளர் பலி. 40 பேர் மாயம்

சீன தினசரியின் துணைத் தலைமை ஆசிரியர் டத்தின்

மேலும்
img
ரசாயனத்தைக் கொட்டிய சம்பவத்தில் எனக்குத் தொடர்பா? குற்றச்சாட்டுகள் பரப்புவதை நிறுத்துங்கள்.

தங்கள் கடமைகளை ஆற்றத் தவறியுள்ள தரப்பினர்

மேலும்
img
வாக்குறுதி காற்றில் பறந்தாலும் 190,000 மாணவர்களுக்கு வெ.350 கோடி கடனுதவி. 

வெ.4,000-ஐ அடையும் பட்சத்தில் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img