ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

சாதியால் ஒதுக்கிய கிராம மக்கள்...தோளில் சுமந்த எம்எல்ஏ
சனி 04 ஆகஸ்ட் 2018 16:33:19

img

சாதி என்ன என்று தெரியாததால் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை கிராமவாசிகள் அடக்கம் செய்ய மறுத்த நிலையில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை தன் பிள்ளைகளின் உதவியுடன் அடக்கம் செய்து இந்த உலகில் மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார். இச்செயலால் எம்எல்ஏவை பலர் பாராட்டி வருகின்றனர். 

ஒடிஷா மாநிலத்திலுள்ள சுதாமல் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமனபள்ளி கிராமத்தில் ஒரு 80வயதுடைய ஏழை மூதாட்டியும், அவரின் 50வயது மைத்துனருடன் சாலை ஓரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் அந்த கிராமத்தில் பிச்சை எடுத்தும், அங்கிருக்கும் வீடுகளில் உணவுகளை பெற்றும் வாழ்ந்து வந்தனர். கிராமத்தார்களுக்கு இவர்களின் எதுவும் தெரியாமலே இருந்திருக்கிறது. இந்நிலையில், புதன் கிழமை காலை அந்த மூதாட்டி இறந்துள்ளார். ஆதரவற்ற அந்த மூதாட்டியின் சாதி தெரியதால் தொட்டு தூக்கி அடக்கம் செய்ய ஊர் மக்கள் மறுத்தனர்.

இத்தகவலை அறிந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ரெங்காலி தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா என்பவர் தன் பிள்ளைகளுடன் வந்து அந்த மூதாட்டியை தோளில் சுமந்து, ஒரு மகனாக செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் செய்து அந்த மூதாட்டியை அடக்கம் செய்தார். 

இதுகுறித்து அந்த எம்எல்ஏ தெரிவிக்கையில்," இந்த கிராமத்தில் வேறு சாதி என்றால் அவர்களை தொட மாட்டார்கள் அதனால் நானே வந்து அந்த மூதாட்டிக்கு ஒரு மகனாக இருந்து அடக்கம் செய்தேன். பெரும்பாலான மக்கள் இந்து முறைப்படி புதைத்து வருவதால், அதன்படியே செய்தேன். ஏழை, பணக்காரர் யாராக இருந்தாலும், இறந்தபின் மரியாதைடன் நடத்தப்படுவது அவசியமாகும். அதை நான் ஒரு மனிதராக மனிதநேயத்துடன் செய்தி ருக்கிறேன்” என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img