வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

மூச்சுதிணறல் காரணமாக தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி!
சனி 28 ஜூலை 2018 17:39:59

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான தா.பாண்டியன் 85 வயதாகியும் கட்சிப்ப ணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்னதாக, நேற்று கோபா லபுரம் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்தவர், கலைஞர் விரைவில் நலம் பெறுவார் என கூறியிருந்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img