வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

கலைஞரிடம் இயற்கை மன்றாடுகிறது’ - தா.பாண்டியன்
வெள்ளி 27 ஜூலை 2018 14:23:30

img

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹா சன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பத்தரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கோவி.லெனின் உட்பட பலர் கோபாலபுரம் இல்லம் வருகை தந்து நலம் விசாரித்தனர்.

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தமிழ்மாநிலதலைவர் தமிழிசை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இயக்கு நர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம்,  நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொடர்பு கொண்டு கலைஞரின் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் கலைஞரின் நலம் குறித்து நேரில் வந்து விசாரித்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ‘’கலைஞர் உயிருக்காக மன்றாடவில்லை; அவரிடம் இயற்கை மன்றாடுகிறது.  தமிழக மக்கள் நெஞ்சில் கலைஞர் என்றும் நிலைத்திருப்பார்’’ என்று தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img