img
img

ஓபிஎஸ்சும், நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும்!!- முக.ஸ்டாலின்
புதன் 25 ஜூலை 2018 13:49:36

img

இன்று சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் திமுக தலைவர் கலைஞர் நலமாக உள்ளார். அண்மையில் நடந்த சிகிச்சைக்கு பிறகு லேசான காய்ச்சல் இருந்தது அதனால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் மற்றபடி அதிர்ச்சிக்குரிய சம்பவம் எதுவும் இல்லை எனவே வந்தந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அப்போது துணை முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்திக்க மத்திய பெண் அமைச்சர் மறுப்பு பற்றிய கேள்விக்கு, துணை முதல்வர் அரசியல் மற்றும் அரசு சம்பந்தம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதற்கு அதாவது ஓபிஎஸ்ஸின் சகோதரர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதற்கு நன்றி தெரிவிக்க சென்றேன் என கூறியுள்ளார். எப்படி அரசின் ராணுவ ஹெலிகாப்டரை தனிப்பட்ட முறையில் உதவிக்கு கொடுக்க முடியும். எனவே விதியை மீறி ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்த நிர்மலா சீதாராமனும், உதவி பெற்ற ஓபிஎஸ்சும் பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேபோல் ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கில் இன்று புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் மட்டுமல்ல இபிஎஸ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தேர்தலை சந்திப்பதை போல சிறையையும் சந்திக்கும் நேரம் வரும். அவர்களின் ஊழல்களை திமுக பட்டியலிட்டு ஆளுநர் முன் வைத்துள்ளோம் எனவும் கூறினார். 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img