ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

இடரில் சிக்கி 7 நாட்கள் காரின் ரேடியேட்டர் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்த இளம்பெண்!!
செவ்வாய் 17 ஜூலை 2018 12:48:30

img

கலிபோர்னியாவில் 250 அடி மலைச்சரிவில் வாகன விபத்தாகி பேரிடரில் சிக்கிய பெண் ஒருவர் ஏழு நாட்களாக காரின் ரேடியேட்டர் தண்ணீரை குடித்து உயிர்வாழ்ந்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் பிக் சர் பகுதியில் ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் என்ற இளம்பெண் போலாந்திலிருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு காரில் சென்று ள்ளார். மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த காரின் குறுக்கே  காட்டுவிலங்குகள்  வந்ததால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி யுள்ளார். அப்போது திடீரென்று கார் தடம்புரண்டு  சுமார் 250 அடி பள்ளத்தில் கடல் பாறைகளுக்கு இடையே கார் கவிழ்ந்தது.  ஆனால் இந்த சம்பவம் பற்றி அறியாத அவரது உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்து தேடிவந்தனர்.  இந்த விபத்து நடந்து சுமார் 7 நாட்களுக்கு பிறகு அந்த கடற்கரை வழியே நடந்து சென்ற சிலர் அங்கு கார் விபத்துக்குள்ளாகி கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவலளித்தனர்.

அப்போது ஏஞ்செலா ஹெர்னாண்டெஸ் விலா எலும்புகளில் பலத்தகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றினர். மேலும் 7 நாட்கள் அவர்  உணவில்லமால் உயிருடன் இருந்தது ஆச்சிரியம் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் கடந்த 7 நாட்களாக காரின் ரேடியேட்டர் நீரை குடித்து உயிர் வந்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img