செவ்வாய் 25, செப்டம்பர் 2018  
img
img

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் இன்று மேல்முறையீடு?
திங்கள் 16 ஜூலை 2018 17:06:05

img

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரிப் , ஊழல் செய்து சம்பாரித்த பணத்தில் லண்டனில் 'அவன்பீல்டு' சொகுசு வீடுகள் வாங்கியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், அவரது மகள் மரியம், அவரது மருமகன் கேப்டன் சப்தாரும் தண்டிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நீதிமன்றம் நவாஸ் ஷெரிப்பிற்கும் அவரது மகளுக்கும் 10 ஆண்டுகாலம் சிறை என்று தீர்ப்பளித்துள்ளது. அதனைத்தொடர்ந்து இவ்விருவருக்கும் பி வகுப்பு சிறை கொடுக்கப்ப ட்டது. இருந்தாலும் இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டனர்.

ராவல்பிண்டியில் உள்ள அந்த சிறையில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி லண்டனில் இருந்து வந்தவுடனே அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை எதிர்த்து நவாஸ் மற்றும் அவரது மகள் மேல்முறையீடு செய்ய வுள்ளனர். இது சம்மந்தமாக நேற்று நவாஸின் வழக்கறிஞர்கள் முக்கிய ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.    

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு

மேலும்
img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img