திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

குகையில் சிக்கிய மாணவர்களை மீட்க உதவிய இந்தியர்கள்...
வியாழன் 12 ஜூலை 2018 13:53:45

img

தாய் கால்பந்தாட்ட சிறுவர்கள், தாம் லுஆங் என்ற மலைக்குகைக்குள் 18 நாட்கள்வரை சிக்கிக்கொண்டனர். கால்பந்தாட்ட பயிற்சியை முடித்துவிட்டு, குகைக்குள் சாகச பயணம் மேற்கொள்ள அந்த 13 பேர் உள்ளே சென்றுள்ளனர். பிறகு அவர்கள் மாட்டிக்கொண்டதை எட்டு நாட்களுக்கு பின்னர்தான் கண்டுபிடித்தது இராணுவம். மழை அதிகமாக பொழிந்துவந்ததால் குகைக்குள் தண்ணீர் ஏறிக்கொண்டே சென்றது.

அது வறண்டுபோக நான்கு மாத காலம் எடுத்துக்கொள்ளும் அதுவரை சிறுவர்கள் அங்கேயே இருக்கட்டும் என்று தாய் இராணுவம் தெரிவித்தது. உள்ளே மாட்டிக்கொண்டவர்களுக்கு மூச்சு விடவும், சாப்பாடும் ஸ்கூபா டைவர்ஸ் மூலமாக தொலை தூரம் உள்ளே சென்று கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி நடந்துகொண்டிருப்பதை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த உலகமக்கள் அனைவரும் பிராத்தனை செய்யாத நேரம் இல்லை. உலகமுழுவதிலும் இருந்து பல்வேறு உதவிகள் இந்த சிறுவர்களுக்காக வந்தது. அப்படி வந்தவர்கள்தான் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கூபா டைவர்ஸ். இந்த மீட்புப்பணியில் பல்வேறு மக்கள் உதவிசெய்துள்ளனர் அதில் இரண்டு இந்தியர்களும் அடக்கம். 

புனே நகரத்தை சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர் லிமிடேட் என்ற பம்ப் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இன்ஜினியர்கள் அந்த மீட்புக்குழுவில் தொழில்நுட்ப துறையில் செயல்பட்டனர். பிரசாத் குல்கர்னி மற்றும் ஷ்யாம் ஷுக்லா என்ற அந்த இன்ஜினியர்கள் ஜூலை 5 ஆம் தேதி அந்த குகைக்கு சென்று சிறுவர்களை மீட்கும் மீட்பு குழுவில் சேர்ந்தனர்.

குகைக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற இவ்விருவர்களும் அதில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குகையில் நீர் அதிகரித்துக்கொண்டும், குகையின் அமைப்பு ஆழமாக இருந்ததால் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்ததாக மீட்பு பணியில் கலந்துகொண்ட குல்கர்னி தெரிவித்துள்ளார்.

இறுதியில் குகைக்குள் இருந்த சிறுவர்கள் மூன்று கட்டமாக வெளியேற்றப்பட்டனர். முதல் கட்டத்தில் நான்கு பேர்களை வெளியேற்றினர். அடுத்த நாளில் அடுத்த நான்கு பேரை வெளியேற்றினனர். ஜூலை 10 ஆம் தேதி கடைசி கட்ட மீட்பில் ஐந்து பேர் வெளியேற்றப்பட்டனர். தற்போது இந்த விஷ யம் உலகமுழுக்க பெருமையாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு

மேலும்
img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img