வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

தூக்கில் தொங்க தயார்! சவால் விடும் செந்தில் பாலாஜி!
செவ்வாய் 10 ஜூலை 2018 16:21:09

img

தைரியம் உள்ள முதலமைச்சராக இருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சட்ட மன்றத்தை கூட்டி மீண்டும் முதலமைச்சராகி காட்டுங்கள். அப்படி செய்தால் இந்த மேடையிலேயே தூக்கில் தொங்க தயார் என்று எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி  சவால் விட்டுள்ளார்.கோவை கொடிசியா மைதானத்தில் அமமுக பொதுக்கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி கூறியதாவது, 

எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சசிகலா, டிடிவி தினகரன் போட்ட பிச்சையில் தான் அமைச்சர்க ளாக உள்ளனர். தினகரன் நினைத்திருந்தால் அமைச்சரவையை மாற்றி இருக்கலாம். சுயமாக வளர்ந்ததாக கூறும் எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழுந்ததை தமிழக மக்கள் பார்த்துள்ளனர். ஜெயலலிதா இருந்திருந்தால் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்க முடியாது.

தைரியம் உள்ள முதலமைச்சராக இருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் முதலமைச்சராகி காட்டுங்கள். இல்லையேல் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராகி காட்டுங்கள். அப்படி செய்தால் இந்த மேடையிலே தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும், இரண்டு அம்மாவாசைக்குள் இந்த ஆட்சி கலையும் எனவும் தெரிவித்தார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img