திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

அமெரிக்காவில் செய்தித்தாள் நிறுவனத்தில் துப்பாக்கி சூடு !! டிரம்ப் வருத்தம்!!
வெள்ளி 29 ஜூன் 2018 15:43:05

img

அமெரிக்கா மேரிலாண்டில் அனாபோலிஸ் என்ற இடத்தில் இயங்கிவந்த '' கேபிடல்  கேசட்''  என்ற செய்தித்தாள் அலுவலகத்தில் மர்ம நபர்கள் ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.

சுமார் 170 வேலை செய்துகொண்டிருந்த செய்தித்தாள் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் பற்றி போலீசார் தெரிவிக்கையில், ஏற்கனவே அந்த செய்தித்தாள் நிறுவனத்தின் மீது பலமுறை சமூக ஊடகங்களிலிருந்து மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் ஆனால் தற்போது நடந்த இந்த துப்பாக்கி சூடு எதிர்பாராத விதமானது என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக ஒரு நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர் . அந்த நபர் தனது பையில் போலி கிரேனைட் குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்த ஒருவர் இந்த சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், அலுவகத்தில் மேஜையில் அமர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் பொழுது துப்பாக்கியால் சுட்டு பணியாளர்கள் அலறி ஓடும் சத்தமும், துப்பாக்கி குண்டுகளை நிரப்பவும் சத்தமும் கேட்டால் எப்படி இருக்கும் அவ்வளவு கொடுமையான, கோரமான தருணம் அது என கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தால் நியூயார்க்கில் உள்ள பல செய்தித்தாள் மற்றும் ஊடக அலுவலகங்களுக்கு பாதுகாப்புபடை அனுப்பப்பட்டது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.  

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img